ரூ.2000 கூலி தர மறுத்தவரின் தாயை கட்டையால் அடித்து கொன்ற நபர் கைது!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே 2000 ரூபாய் கூலிப் பணம் தர மறுத்தவரின் தாயை உறவினர் ஒருவர் கட்டையால் அடித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Written by - Gowtham Natarajan | Last Updated : Jun 20, 2022, 02:38 PM IST
  • கூலி பணம் தராமல் இழுக்கடிப்பு ?
  • ஆத்திரத்தில் அரங்கேறிய கொடூரம்
  • கொலையாளி கொடுத்த வாக்குமூலம்
ரூ.2000 கூலி தர மறுத்தவரின் தாயை கட்டையால் அடித்து கொன்ற நபர் கைது! title=

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே கருந்தேவன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம். பொறியியல் பட்டதாரியான இவர், கோவையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஒப்பந்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் அவரது உறவினரான சின்ராஜ் என்பவரை கோவைக்கு வேலைக்காக அழைத்துச் சென்றுள்ளார். 

crime,murder,namakkal,old lady,zee tamil,ரூ.2000 கூலி தர மறுத்தவரின் தாயை கட்டையால் அடித்து கொன்ற நபர் கைது!

இதனைத் தொடர்ந்து வேலை செய்ததற்கான கூலியை சின்ராஜ் சண்முகத்திடம் கடந்த ஒரு வாரமாக கேட்டு வந்துள்ளார். இந்நிலையில் கூலி பணத்தை கேட்டு சண்முகத்தின் தாயிடம் சின்ராஜ் ரகளையில் ஈடுபட்டுள்ளார். அப்போது கீழே கிடந்த உருட்டுக்கட்டையை எடுத்து சின்ராஜ், சண்முகத்தின் தாய் மல்லிகாவை பின்பக்கமாக தாக்கியுள்ளார். இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த மல்லிகாவை அப்பகுதியினர் மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவனைக்கு சிகிச்சைக்காக  மருத்துவமனை கொண்டு சென்றனர். ஆனால் அவர் போகும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

crime,murder,namakkal,old lady,zee tamil,ரூ.2000 கூலி தர மறுத்தவரின் தாயை கட்டையால் அடித்து கொன்ற நபர் கைது!

மேலும் படிக்க | விளையாட்டு விபரீதமானது - தாயை பயமுறுத்த பிளேடை கழுத்தில் வைத்த மகன் பலி

இதற்கிடையே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பள்ளிபாளையம் போலீஸார், கட்டை உள்ளிட்ட தடயங்களை சேகரித்து கொலை செய்த உறவினர் சின்ராஜை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க | திருட போன கடைக்கு கடிதம் போட்ட திருடன்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News