செங்கல்பட்டில் கூட்டு பாலியல் வன்கொடுமையா?... பெண் கொடுத்த புகாரில் குழப்பம் - முழு விவரம்

21 வயதான பெண், தன்னை 4 பேர் இணைந்து, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல் நிலையத்தில் புகார் செய்த நிலையில், காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Written by - Sudharsan G | Last Updated : Feb 5, 2023, 12:22 PM IST
  • ஆனால், இந்த வழக்கில் குழப்பம் நீடிக்கிறது.
  • இதில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
செங்கல்பட்டில் கூட்டு பாலியல் வன்கொடுமையா?... பெண் கொடுத்த புகாரில் குழப்பம் - முழு விவரம் title=

பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் காயத்ரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு வயது 21. இவர் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தனியார் வங்கியில் டெலிகாலராக பணிபுரிந்து வருகின்றார்.

காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் காவல் நிலையத்திற்கு நேற்று (பிப். 4) நள்ளிரவு வந்த காயத்ரி, தன்னை 4 பேர் காரில் கடத்தி வந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் தெரிவித்ததால் காவல்துறையினர் அதிர்ந்து போயினர். தன்னுடைய சக தோழியை சந்திக்க நேற்றிரவு (பிப். 4) சைதாப்பேட்டையில் இருந்து செங்கல்பட்டு ரயில்வே நிலையத்துக்கு வந்ததாகவும் இதுதொடர்பாக காவலர்களிடம் காயத்ரி தெரிவித்துள்ளார்.  

செங்கல்பட்டு ரயில் நிலையத்துக்கு வெளியே நின்றிருந்த 4 இளைஞர்கள் தன்னிடம் பேச்சுக்கொடுத்து கொண்டே காரில் கடத்திக்கொண்டு சென்றதாகவும், தன்னை கடத்தி சென்ற நான்கு இளைஞர்களும் காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் காவல் எல்லைக்கு உட்பட்ட வனப்பகுதியில் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும் படிக்க | இலவச வேட்டி சேலைக்கு டோக்கன்... நெரிசலில் சிக்கி 4 பேர் பலி - நிவாரணம் அறிவித்த முதல்வர்

மேலும் அந்த நான்கு அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து தப்பித்து, சாலவாக்கம் காவல் நிலையத்துக்கு வந்ததாகவும் காயத்ரி தெரிவித்ததால், காவல்துறையினர் தன்னுடைய உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். 

காவல் துறையினர் காயத்ரியை அழைத்துக்கொண்டு செங்கல்பட்டு மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோதனைக்காக உட்படுத்தினர். இது தொடர்பாக காவல்துறையினர் நமது செய்தியாளரிடம்,"காயத்ரி, காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த மலையாங்குளம் பகுதியை சேர்ந்த சலீம் என்பவரை மூன்று மாத காலமாக காதலித்து வந்துள்ளார். சலீம் நேற்று திருமணம் செய்து கொள்கின்றேன் என கூறி அழைத்ததால் செங்கல்பட்டு ரயில்வே நிலையத்துக்கு வந்துள்ளார்.  

ரயில்வே நிலையம் அருகே காத்திருந்த சலீமுடன் பைக்கில் மலையாங்குளம் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு வைத்து காயத்ரியை சலீம் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அனுசுயா தான் தயாராக வைத்திருந்த தாலிக்கயிறை எடுத்து சலீம்மிடம் கொடுத்து இந்த தாலியை உடனே தனக்கு கட்டுக்கூறி வற்புறுத்தியுள்ளார். அதற்கு சலீம் மறுத்துள்ளார். அதனால் காயத்ரி சத்தம் போட்டு அந்த பகுதி மக்களை கூட்டியுள்ளார். அப்பகுதி மக்கள் காயத்ரியை அழைத்துக் கொண்டு வந்து காவல் நிலையத்தில் விட்டுச்சென்றுள்ளனர்" என தெரிவித்தனர்.

கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக காயத்ரி கூறுவது உண்மையா ? அல்லது சலீம் என்ற தனிநபர் மட்டும் காயத்ரியை பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல்துறையினர் கூறுவது உண்மையா ?  என்பது உறுதியாகவில்லை. இந்நிலையில் சலீமை கைது செய்து சாலவாக்கம் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றார்கள்.

மேலும் படிக்க | தமிழக ரயில் திட்டங்களுக்கு தேவைக்கேற்ப நிதி ஒதுக்கீடு இல்லை: சு.வெங்கடேசன் எம்.பி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News