பேரிடர் மேலாண்மை மற்றும் முதலுதவி பயிற்சியின் போது பயிற்சியாளர் கீழே தள்ளிவிட்டதில் கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை: கோவை தனியார் கல்லூரியில் என்.என்.எஸ் பயிற்சியின் போது தவறி விழுந்த சம்பவத்தில் பயிற்சியாளர் கைது செய்யப்பட்டார். கோவை தனியார் கல்லூரி ஒன்றில் என்.என்.எஸ் சார்பில் பேரிடர் மேலாண்மை பயிற்சி நடைபெற்றுள்ளது.
தேசிய பேரிடர் மேலாண்மையை சேர்ந்த பயிற்சியாளர் ஆறுமுகம் என்பவர் 20 மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வந்தார். கல்லூரியின் மாடியில் இருந்து மாணவர்கள், மாணவிகள் கீழே விரிக்கப்பட்ட வலையில் குதித்து பயிற்சியில் ஈடுபட்டனர்.
அப்போது மாணவி லோகேஸ்வரி என்பவர் மாடியில் இருந்து குதிக்க பயந்தபடி அமர்ந்திருந்தார். பயப்படாமல் கீழே குதிக்கும்படி பயற்சியாளர் ஆறுமுகம் அவரை கூறினார். ஆப்போது லோகேஸ்வரியை பயிற்சியாளர் கீழே தள்ளிவிட்டார். அதில் எதிர்பாராத விதமாக முதலாவது மாடியின் சன் சேடில் மாணவியின் கழுத்து பகுதி மோதி பலத்த காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து மாணவி லோகேஸ்வரி சிகிச்சைக்கு கோவை அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே மாணவியின் உயிர் பிரிந்தது. இது தொடர்பாக மாணவியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் பயிற்சியாளர் ஆறுமுகம் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் கைது செய்துள்ளனர்.
What d hell is this ? Irresponsible to d core.He has to be punished severely. B4 day girl gets ready he pushed her down n she died. பேரிடர் மீட்பு பயிற்சியில் கோவை மாணவி பலி @karthickselvaa @PTTVOnlineNews @dhanyarajendran @sumanthraman @ThanthiTV @itisprashanth @RangarajPandeyR pic.twitter.com/NUjS6unqHa
— (@rajini_mano) July 13, 2018