இன்று திமுக எனும் மாபெரும் இயக்கத்தின் தலைவராக பதவியேற்கும் மு.க. ஸ்டாலின்

மு.க ஸ்டாலின் எதிர்க்க யாரும் இல்லாததால், இன்று திமுக தலைவராக பதவியேற்க்க உள்ளார் 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 28, 2018, 12:23 AM IST
இன்று திமுக எனும் மாபெரும் இயக்கத்தின் தலைவராக பதவியேற்கும் மு.க. ஸ்டாலின் title=

முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி அவர்கள் மறைவினை அடுத்து, தற்போது திமுக-வின் தலைவருக்கான தேர்தல் இன்று நடத்தப்படவுள்ளது. அதற்க்கான வேட்புமனு தாக்கல் ஆகஸ்ட் 26 ஆம் நாள் மாலை 4 மணிக்குள் செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இதனால் தற்போது திமுகவின் செயல் தலைவராக இருக்கும் மு.க. ஸ்டாலின் நேற்று முன்தினம் திமுக மாவட்ட செயலாளர்கள் முன்மொழிய வேட்புமனு தாக்கல் செய்தார். அதேபோல திமுகவின் பொருளாளர் பதிவிக்கு துரைமுருகன் வேட்புமனு தாக்கல் செய்தார். திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி வேட்புமனுவை பெற்றுக்கொண்டார்.

இவர்கள் இருவரையும் எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், திமுக தலைவராக ஸ்டாலினும், பொருளாளராக துரைமுருகனும் போட்டியின்றி தேர்வாகி உள்ளனர். இதுக்குறித்து இன்று நடைபெறும் திமுக செயற்குழு கூட்டத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. 

திமுக வரலாற்றில், அதன் இரண்டாவது தலைவராக மு.க. ஸ்டாலின் பதவியேற்க்க உள்ளார். இதற்கு முன்பு கருணாநிதி மட்டும் அந்த பதவியை வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News