TN Elections 2021: பாம்பு மற்றும் பல்லியை விட விஷம் கொண்டவர் முதல்வர் பழனிசாமி: மு.க ஸ்டாலின் தாக்கு

தேர்தலுக்கு கிட்டத்தட்ட இன்னும் இரண்டு வாரம் மட்டும் இருப்பதால், அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முதல்வர் பழனிசாமி பாம்பு மற்றும் பல்லியை விட விஷம் கொண்டவர் என்று நான் சொல்கிறேன் என சேலத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசினார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Mar 24, 2021, 02:24 PM IST
  • சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 6 ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கவுள்ளது.
  • தேர்தலுக்கு கிட்டத்தட்ட இன்னும் இரண்டு வாரம் மட்டும் இருப்பதால், தீவிர தேர்தல் பிரச்சாரம்.
  • பொய் வாக்குறுதிகளை கூறி சொந்த மாவட்டத்தையே இன்றைக்கு ஏமாற்றிக் கொண்டிருக்கும் முதலமைச்சர் பழனிசாமி: ஸ்டாலின்.
TN Elections 2021: பாம்பு மற்றும் பல்லியை விட விஷம் கொண்டவர் முதல்வர் பழனிசாமி: மு.க ஸ்டாலின் தாக்கு title=

சேலம்: சேலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக முதல்வர் பழனிசாமியை கடுமையாக விமர்சித்தார். தமிழ் நாட்டில் நடைபெற்ற உள்ள சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 6 ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கவுள்ளது. 

இந்தமுறை ஐந்துமுனை போட்டி நடக்கிறது. இதில் திமுக தலைமையில் (DMK Alliance) காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள், விசிக, முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட 14 கட்சிகள் இணைந்து போட்டியிடுகின்றன. அதிமுக கூட்டணியில் (AIADMK Alliance) பாஜக, பாமக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. இந்த இருபெரும் கூட்டணி கட்சிகளை தவிர, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் மற்றும் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி இணைத்து தேர்தலை சந்திக்கிறது. அதிமுகவில் இருந்து பிரிந்த டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் (Amma Makkal Munnetra Kazhagam) மற்றும் தேமுதிக கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. மறுபுறம் கூட்டணி அமைத்து போட்டியிடும் கட்சிகளுக்கிடையே சீமானின் நாம் தமிழர் கட்சி (Naam Tamilar Katchi) மட்டும் அனைத்து தொகுதிகளிலும் தனித்துக் களம் காண்கிறது.

 

தேர்தலுக்கு கிட்டத்தட்ட இன்னும் இரண்டு வாரம் மட்டும் இருப்பதால், அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக முழுவதும் தேர்தல் களமாக காட்சியளிக்கிறது. இந்தநிலையில், இன்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் (MK Stalin) சேலத்தில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அப்பொழுது நடந்து சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்துள்ளார். அவர் தனது தேர்தல் பரப்புரையில், இரும்பு நகரமான சேலத்திற்கு வந்திருக்கிறேன். வீரபாண்டியார் மாவட்டத்திற்கு வந்திருக்கிறேன். இதுவரையில் எந்த மாவட்டத்திற்கும் செய்யாத சிறப்புகளை, சாதனைகளை சேலம் மாவட்டத்திற்கு நம்முடைய கழகம் ஆட்சியின் போது செய்திருக்கிறோம். ஆனால் தமிழக முதல்வர் பழனிசாமி தான் கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் காற்றில் பறக்கவிட்டார். சேலம் மாவட்டத்திற்கு எதுவும் செய்யவில்லை. பொய் வாக்குறுதிகளை கூறி சொந்த மாவட்டத்தையே இன்றைக்கு ஏமாற்றிக் கொண்டிருக்கும் ஒரு முதலமைச்சர் தான் இங்கு இருக்கும் பழனிசாமி. 

ALSO READ | தமிழக சட்டமன்றத் தேர்தல்: ஆயிரம் விளக்கு தொகுதியில் ஜொலிக்கப்போவது எந்த கட்சியின் விளக்கு?

ஆனால் இப்போது தமிழ்நாட்டில் ஒரு முதலமைச்சராக இருப்பவர் எப்படி முதலமைச்சர் (Edappadi K Palaniswami) பதவிக்கு வந்தார் என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால் அவர், "நான் படிப்படியாக வளர்ந்து வந்தேன்" என்று சொல்கிறார். அவர் எப்படி ஊர்ந்து சென்று முதல்வராக ஆனார் என்பது சமூக ஊடகங்களில் இருக்கிறது. அவர், நான் ஊர்ந்து செல்ல பாம்பு அல்லது பல்லி-யா என முதல்வர் கேட்கிறார். ஆனால் முதல்வர் பழனிசாமி பாம்பு மற்றும் பல்லியை விட விஷம் கொண்டவர் என்று நான் சொல்கிறேன் என சேலத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசினார்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News