திமுகவினர் பேனர், கட்அவுட் வைக்கக்கூடாது என ஸ்டாலின் வலியுறுத்தல்!

திமுக நிகழ்ச்சிக்காக கட்சியினர் யாரும் பேனர் வைக்கக்கூடாது என மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!!

Last Updated : Sep 13, 2019, 01:07 PM IST
திமுகவினர் பேனர், கட்அவுட் வைக்கக்கூடாது என ஸ்டாலின் வலியுறுத்தல்! title=

திமுக நிகழ்ச்சிக்காக கட்சியினர் யாரும் பேனர் வைக்கக்கூடாது என மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!!

சென்னையில் சட்டவிரோதமாக வைக்கப்பட்ட பேனர் சரிந்து இருசக்கர வாகனத்தில் சென்ற 23 வயது பெண் இன்ஜினியர் சுபஸ்ரீ மீது  விழுந்துள்ளது. இதில், நிலை தடுமாறிய அவர் கீழே விழுந்துள்ளார். இதனால் அவரது பின்னால் வந்த தண்ணீர் லாரி அவர் மீது மோதியது. உடனடியாக அந்தப் பெண் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால், அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அரசியல் கட்சிகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், திமுக நிகழ்ச்சிகளுக்காக பேனர்கள், கட் அவுட், பிளக்ஸ் போர்டு வைக்கக்கூடாது என்று திமுகவினருக்கு அக்கட்சியின்  தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். அறிவுரையை மீறி திமுகவினர் பேனர் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஸ்டாலின் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இதுதொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும், ’போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள், பிளக்ஸ் போர்டுகளை வைக்க கூடாது. நான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளிலோ, கூட்டங்களிலோ பேனர், கட் அவுட் வைத்தால் பங்கேற்க மாட்டேன். திமுக நிர்வாகிகள் அனைவரும் இந்த அறிவுறுத்தலை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். ஒன்று அல்லது இரண்டு பேனர்களை விளம்பரத்திற்காக உரிய அனுமதி பெற்று பாதுகாப்பாக வைக்கலம்’ என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நிகழ்ச்சியோ, கூட்டமோ எதுவாக இருந்தாலும் எனது அறிவுறுத்தலை மீறி பேனர் வைத்தால் நான் பங்கேற்க மாட்டேன் எனவும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

 

Trending News