பேருந்துகள் கூடுதல் கட்டணம் வாங்கினால் கடும் நடவடிக்கை -அமைச்சர் எச்சரிக்கை

பண்டிகைக் காலத்தில் விதிகளை மீறி இயக்கப்படும் வாகனங்களுக்கு உரிய அபராதம் விதிக்கப்படும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் எச்சரித்துள்ளார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 13, 2021, 06:24 PM IST
  • விதிகளை மீறி இயக்கப்படும் வாகனங்களுக்கு உரிய அபராதம்.
  • கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை.
  • வரி செலுத்தாத ஆம்னிப் பேருந்துகள் சிறை பிடிக்கப்படும்.
பேருந்துகள் கூடுதல் கட்டணம் வாங்கினால் கடும் நடவடிக்கை -அமைச்சர் எச்சரிக்கை title=

சென்னை: பண்டிகைக் காலத்தில் கூட்டம் அதிகமாக இருப்பதைப் பயன்படுத்தி கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். மேலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னிப் பேருந்துகளை சிறைபிடிக்க வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பண்டிகை காலங்களில் பேருந்துகளில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகளை இயக்கப்பட்டு வருகிறது. மேலும் ஆம்னி பேருந்து சேவையும் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

ஆனால் ஆம்னி பேருந்துகளில் அதிகக்கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் சிறப்பு பேருந்து ஏற்பாடுகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

அந்த கூட்டத்தில் அதிக அளவில் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை விழாக்காலங்களை முன்னிட்டு மக்கள் அதிகமாக தமது சொந்த ஊர் செல்லும் போது ஆம்னிப் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்க வாய்ப்பு உள்ளது. 

ALSO READ |  பண்டிகை கால சிறப்பு பேருந்துகள்: தமிழக போக்குவரத்து அமைச்சகத்தின் முக்கிய அறிவிப்பு

எனவே,  போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, 13.10.2021 முதல் 20.10.2021 வரை தமிழகம் முழுவதும் ஆம்னிப் பேருந்துகளுக்கான சிறப்பு சோதனைகள் மேற்கொள்ள அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் சரக அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விதிகளை மீறி இயக்கப்படும் வாகனங்களுக்கு உரிய அபராதம் விதிக்கப்படும். அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னிப் பேருந்துகள் மற்றும் தமிழ்நாட்டிற்குரிய வரி செலுத்தாத ஆம்னிப் பேருந்துகள் சிறை பிடிக்கப்படும் என எச்சரிக்கை செய்யப்பட்டது. 

பொதுமக்கள் ஆம்னிப் பேருந்துகள் மீதான புகார் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 4256151 என்ற எண்ணில் புகார் பதிவு செய்யலாம் என ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ |  அடுத்து நான்கு நாட்களுக்கு அரசுப்பள்ளிகளுக்கு விடுமுறை -முழுவிவரம்

omnibus buses that charge extra

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News