காலை சிற்றுண்டி திட்டம்: சேலத்தில் தொடங்கிவைத்தார் அமைச்சர் பொன்முடி!

சேலம் மாநகராட்சியில் 5 ஆயிரத்து 719 மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும்  திட்டத்தை உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இன்று (செப். 16) தொடங்கிவைத்தார்.

Written by - Sudharsan G | Last Updated : Sep 16, 2022, 11:40 AM IST
  • 1-5ஆம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம்.
  • காலை சிற்றுண்டி திட்டம் முதலமைச்சரால் நேற்று தொடங்கிவைக்கப்பட்டது.
  • சேலத்தில் இத்திட்டம், முதற்கட்டமாக 54 பள்ளிகளில் செயல்படுத்தப்படுகிறது.
காலை சிற்றுண்டி திட்டம்: சேலத்தில் தொடங்கிவைத்தார் அமைச்சர் பொன்முடி! title=

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப்பள்ளிகளில் படிக்கும் ஏழை குழந்தைகளின் படிப்பை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டினை போக்கவும், கற்றல் இடைநிற்றலை தவிர்க்கவும் காலை உணவுத்திட்டத்தை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (செப். 15) மதுரையில் தொடங்கிவைத்தார். இதன்படி, 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, அனைத்துப்பள்ளி நாட்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படுகிறது.

முதற்கட்டமாக இத்திட்டம், சில மாநகராட்சி, நகராட்சி, தொலைதூர கிராமங்களில் தொடங்கப்படுகிறது. படிப்படியாக அனைத்து பகுதிகளுக்கும் விரிவுப்படுத்தப்பட உள்ளது. சேலம் மாவட்டத்தில் முதற்கட்டமாக, மாநகராட்சி பகுதியில் உள்ள 54 அரசு பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன்மூலம் 5 ஆயிரத்து 719 மாணவ, மாணவிகள் பயன்பெற உள்ளனர்.

மேலும் படிக்க | காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்CM Stalin

சேலத்தில் இந்த திட்டத்தினை தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று (செப். 16) தொடங்கிவைத்தார். மணக்காடு மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற இவ்விழாவில், அமைச்சர் பொன்முடி உடன், மாவட்ட ஆட்சியர் கார்மேகம், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன்,சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராஜேந்திரன் , அருள், மாநகராட்சி துணை மேயர் சாரதாதேவி, மாநகராட்சி ஆணையர்  கிறிஸ்துராஜ் ஆகியோர் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுடன் காலை  சிற்றண்டியை சாப்பிட்டனர்.

என்னென்ன நாள்களில் என்னென்ன உணவு வகைகள்?

தொடர்ந்து, மாவட்டத்தில் 54 பள்ளிகளிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் மாணவர்களுக்கு, திங்கட்கிழமை உப்புமா வகையும், செவ்வாய்கிழமை கிச்சடி வகையும், புதன்கிழமை பொங்கல் வகையும், வியாழக்கிழமை உப்புமா வகையும், வெள்ளிக்கிழமை கிச்சடியுடன் இனிப்பும் காலை உணவாக வழங்கப்பட உள்ளது.

இந்த திட்டத்தை திறம்பட செயல்படுத்த சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் நகராட்சி நிர்வாகம், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், பள்ளிக்கல்வி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள், உணவுபாதுகாப்பு ஆகிய துறை அதிகாரிகள் அடங்கிய கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | 'அறிவுப்பசி போக்க வயிற்று பசி ஆற்றும் தமிழகம்'- நூற்றாண்டு கடந்து தொடரும் சமூகநீதி திட்டம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News