வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியில் புதிதாக கட்டப்பட்ட பயணியர் நிழல் கூடம் மற்றும் நியாய விலை கடைகளை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திறந்து வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் அமைச்சர் துரைமுருகன், தமிழ்நாட்டில் கடந்த காலங்களில் நியாய விலைக் கடைகளில் வழங்கப்பட்ட பொருட்கள் தரமானதாக இருந்ததில்லை என பொதுமக்கள் தெரிவித்து வந்தனர். ஆனால், தற்போது தமிழ்நாட்டில் அனைத்து நியாய விலை கடைகளிலும் வழங்கப்படும் பொருட்கள் தரமான பொருட்களாக இருக்க வேண்டுமென முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் படிக்க | 'வெற்றி பெற்றால் தான் அரசியல்வாதி' மதுரை மத்திய தொகுதியில் பிடிஆர் பரபரப்பு பேச்சு
அதன் காரணமாக அனைத்து நியாய விலை கடைகளிலும் தரமான பொருட்கள் தற்பொழுது விநியோகிக்கப்பட்டு வருகிறது. காட்பாடியில் 200 படுக்கையில் கொண்ட பல்நோக்கு மருத்துவமனை இந்தாண்டு துவக்கப்படும். காட்பாடியில் கூடுதலாக ரயில்வே அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காட்பாடியில் செயின் பறிப்பு போன்ற குற்ற சம்பவங்களை தடுக்க கூடுதலாக காவல் நிலையம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு காட்பாடியில் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், இதன் மூலம் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று பேசினார். இந்த நிகழ்ச்சியில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் உள்ளிட்ட திமுகவினர் பலர் கலந்து கொண்டனர். தமிழக ரேஷன் கடைகளைப் பொறுத்தவரை ஏற்கனவே பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. போலி அட்டைதாரர்களை அடையாளம் காணவும், ஒன்றுக்கும் மேற்பட்ட அட்டைவைத்திருப்பதை தடுக்கவும் தமிழக அரசு முயற்சித்து வருவது குறிப்பிட்டத்தக்கது.
மேலும் படிக்க | பாஜக தொண்டர்களுடன் செல்ஃபி எடுத்த பிரதமர் மோடி! வைரலாகும் படங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ