பிஜேபி போட்ட குழுவில் எல்லோருமே பிராமணர்கள், சாதி கட்சியா நடத்துறீங்க? - அமைச்சர் துரைமுருகன்

Minister Durai Murugan : காட்பாடியில் பேசிய அமைச்சர் துரைமுருகன், கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றுவது குறித்து ஆராய பிஜேபி அமைத்த குழுவில் எல்லோருமே பிராமணர்கள், வேறு யாரும் இல்லையா? என கேள்வி எழுப்பினார். 

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 24, 2024, 07:55 PM IST
  • கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றாதது ஏன்?
  • பிஜேபி போட்ட குழுவில் எல்லோருமே பிராமணர்கள்
  • காட்பாடியில் சரமாரியாக விமர்சித்த துரைமுருகன்
பிஜேபி போட்ட குழுவில் எல்லோருமே பிராமணர்கள், சாதி கட்சியா நடத்துறீங்க? - அமைச்சர் துரைமுருகன் title=

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேர்க்காட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் புதிய கட்டடத்தை நீர்வளத்துறை அமைச்சர்  துரைமுருகன், உயர் கல்வித்துறை அமைச்சர், பொன்முடி, கைத்தறி துணி நூல் துறை அமைச்சர் காந்தி ஆகியோர் திறந்து வைத்தனர். இவ்விழாவில் காட்பாடி சட்டமன்ற உறுப்பினரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் பேசுகையில், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவது குறித்து ஆராய பிஜேபி அமைத்த குழுவில் எல்லோருமே பிராமணர்கள், வேறு யாரும் இல்லையா?, இப்படி உரிமைகளை தட்டி கேட்பதால் தான் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்குவதில்லை என குற்றம்சாட்டினார். தொடர்ந்து பேசிய அமைச்சர் துரைமுருகன் "உலகத்திலேயே கிராமபுரத்தில் இருக்கும் ஒரே பல்கலைகழகம் சேர்க்காடு திருவள்ளுவர் அரசு பல்கலைக்கழகம் தான். 

மேலும் படிக்க | Ex காதலிக்கு டிசைன் டிசைனாக லவ் டார்ச்சர்... 'ஐ' விக்ரமாக மாறிய காதலன் - சென்னையில் பயங்கரம்!

ஒரு காலத்தில் மாநில பட்டியலில் இருந்த கல்வியை இந்திரா காந்தி எமர்ஜென்சி காலத்தில் மத்திய பொது பட்டியலுக்கு கொண்டு போயிட்டார். அதை தான் இப்ப திரும்ப கேட்கிறோம். இதை எதிர்ப்பதால் தான் நமக்கு நிதி ஒதுக்க மாட்டேங்குறாங்க. மாநில பட்டியலில் இருந்த கல்வியை பொதுப்பட்டியலுக்கு மாற்றியதையடுத்து, அதை ஆராய்வதற்காக 2017 ஆம் ஆண்டு பாஜக அரசு 17 பேர் கொண்ட குழுவை அமைத்தது. இதில் 3 பேர் அரசு அலுவலர்களாக இருக்க வேண்டும் என்பது விதி. மீதம் உள்ள 14 பேரில் 13 பேர் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள். 13 பேரை நியமித்து விட்டார்கள். மீதம் ஒருவர் ஆள் கிடைக்காததால், இங்க விட்டுவிட்டு கனடாவில் இருந்து ஒரு உறுப்பினரை நியமிக்கிறார்கள்.  அவர் யார்? என்றால் அகில இந்திய பிராமணர் சங்க தலைவர். யாருமே தமிழர் இல்லை. அனைவருமே பிராமணர்கள். நீங்க ஆட்சி நடத்துறீங்களா?, சாதி நடத்துறிங்களா?" என காட்டமாக கேள்வி எழுப்பினார்.

மேலும், " இதை எதிர்த்து பேசுவதால் தான் நமக்கு நிதி கொடுக்க மாட்டேங்குறாங்க. இதனால் தான் கல்வியை மாநில உரிமைக்கு கேட்கிறோம். இது போன்ற சில்லுண்டி தனத்தையெல்லாம் நாங்கள் எத்தனையே முறை பார்த்துள்ளோம். நாம பட்ட கஷ்டத்தை நம்ம பசங்க படக்கூடாது என கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம்." என்றும் அமைச்சர் துரைமுருகன் பேசினார். இதனையடுத்து அமைச்சர் காந்தி வைத்த கோரிக்கை குறித்து அவர் கலகலப்பாக பேசினார்.

"அமைச்சர் காந்தி சோளிங்கருக்கு பொன்னை ஆற்றில் இருந்து தண்ணீர் கேட்டார், பார்க்கலாம் என சொன்னேன். ஆனால் அவர் மேடையில் பேசி உடைத்துவிட்டார். இப்ப மக்கள் கோவிச்சுக்குவாங்க என்ன பண்ண..?, எதை செய்தாலும் ரகசியமாக செய்ய வேண்டும். நான் பள்ளிகூடம் போகும் போது தினமும் ஒரு வாத்தியார் என்னை, ஏ லேட்டா வந்தேனு அடிப்பார். அன்னைக்கு ஒரு நாள் நா பள்ளிக்கு லேட்டா போனேன், எங்கடா போனேனு கேட்டார். எங்க நிலத்துல மெச்சக்காய் விளைந்தது, அதை எடுத்துனு போய் உங்க வீட்டுல கொடுத்துட்டு வந்தேன் என்றேன். உடனே அந்த வாத்தியார், அப்படியா! வேற என்ன இருக்கு உங்க நிலத்தில்? என்றார். நான் கலக்கா இருக்குனு சொன்ன, அப்படியா நாளைக்கு அதை எடுத்துனு வானு சொன்னார். அன்னையில் இருந்து எனக்கு அவர் நெருக்கம் ஆகிட்டார். அப்பவே எனக்கு அரசியல் புத்தி" என்றார் அமைச்சர் துரைமுருகன். 

மேலும் படிக்க | கிசுகிசு : சேட்டைக்காரரின் தகிடுதத்ததால் கலகலக்கும் இயக்குநரின் குடில் கட்சி..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

Trending News