மிக்ஜாம் புயல்: எப்போது உருவாகிறது? எத்தனை கிமீ வேகத்தில் கரையை கடக்கும்? ரவுண்ட்அப்

வங்க கடலில் உருவாகியிருக்கும் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் 24 மணி நேரத்தில் புயலாக மாற இருக்கிறது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 2, 2023, 10:36 AM IST
  • மிக்ஜாம் புயல் லேட்டஸ்ட் அப்டேட்
  • திசை மாறுகிறது என கணிப்பு
  • 8 மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும்
மிக்ஜாம் புயல்: எப்போது உருவாகிறது? எத்தனை கிமீ வேகத்தில் கரையை கடக்கும்? ரவுண்ட்அப் title=

- தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில் தென்மேற்கு வங்க கடலில் நிலைகொண்டிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றுள்ளது. அது படிப்படியாக வலுப்பெற்று இன்னும் 24 மணி நேரத்தில் தீவிரப் புயலாக வலுப்பெற்று, அதே நிலையில் கரையைக் கடக்க இருக்கிறது மிக்ஜாம் புயல். 

- இந்த புயல் சென்னைக்கும் மசூலிப்பட்டனத்திற்கும் இடையே கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டிசம்பர் 5 ஆம் தேதி கரையைக் கடக்கும் என கூறப்படுகிறது.

- வங்க கடலில் இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரி மற்றும் சென்னையில் இருந்து 630 கி.மீ தொலைவில் நிலைகொண்டிருக்கிறது. 
- வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவையொட்டி அதன் அடுத்தக்கட்ட நகர்வுகள் இருக்கும். இருப்பினும் இதுவரை மிக்ஜாம் புயலின் பாதையை துல்லியமாக கணக்கிட முடியவில்லை. 

மேலும் படிக்க | மிக்ஜாம் புயல்: 12 மாவட்ட அதிகாரிகளுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவு

- வட திசையை நோக்கி நகரும்பட்சத்தில் மிக்ஜாம் புயல் நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினத்திற்கு இடையே கரையை கடக்கவும் வாய்ப்பு இருக்கிறது. 

- மிக்ஜாம் புயலையொட்டி தமிழக அரசு சார்பில் மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. கடலில் இருக்கும் மீனவர்கள் கரைக்கு திரும்பவும், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

- கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக, அம்பத்துார், வேளாங்கண்ணி, தலைஞாயிறு மற்றும் கொடுமுடியில், 5 செ.மீ., மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

- மிக்ஜாம் புயல் தமிழகத்தை நெருங்கும்போது சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட கடலோர பகுதிகளில், புயலின் ஒரு பகுதி நுழையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், புயல் காற்றுடன் கூடிய கனமழை பெய்யும்.

- மிக்ஜாம் புயல் கரையை கடக்கும்போது திருவள்ளூர் மாவட்டத்தில் அதிக பாதிப்புகள் இருக்கும் என்பதால் அம்மாவட்டத்துக்கு ரெட் அலெர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. 

- தமிழ்நாட்டில் மொத்தம்  12 மாவடங்கள் உஷார் நிலையில் இருக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

- மின்சாரத்துறை மின்கசிவுகளை தடுக்கவும், மின் விபத்துகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

- ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சியர்கள் புயல் பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறும், குழுக்களை அமைத்து புயல் பாதிப்பை சீரமைக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். 

மேலும் படிக்க | விடிய விடிய நடைபெற்ற சோதனை! அமலாக்கத்துறை அலுவலகத்தில் சிக்கிய ஆவணங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News