தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது!  

Last Updated : Jun 22, 2018, 01:11 PM IST
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை! title=

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை மைய ஆய்வு அதிகாரிகள் கூறியது:- 

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் தமிழகத்தில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. அந்தவகையில் இன்றும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும். மேலும் வட தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் காற்றுடன், இடி மின்னலும் இருக்கும்.

தமிழக கடலோர பகுதிகளில் காற்றின் வேகமும் அதிகமாக இருக்கிறது. மணிக்கு 35 கிலோ மீட்டர் முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுகிறது. தென் தமிழக கடல் பகுதிகளில் 55 கிலோ மீட்டர் வரை காற்று வீசக்கூடும். இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி கடலோர மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

Trending News