மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் செங்கல்பட்டு மாவட்டத்தில் மேல்மருவத்தூர் எனும் ஊரில் அமைந்துள்ளது. இத்தளத்தின் மூலவரான ஆதிபராசக்தி சித்தர்களின் தலைவி எனவும், இத்தளத்தில் எண்ணற்ற சித்தர்கள் உரைந்துள்ளதாகவும் நம்பிக்கை. எனவே இக்கோயிலை ஆதிபராசக்தி சித்தர் பீடம் என்றும் அழைக்கின்றனர். இக்கோயிலானது சென்னை-திருச்சிராப்பள்ளி தேசிய நெடுஞ்சாலை 45ல் மேல்மருவத்தூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது. இந்த கோவிலிற்கு தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதனால் இங்கிருந்து சென்னைக்கு செல்லவும், தமிழகத்தின் தென் மாவட்டங்களான திருச்சி, மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற ஊர்களுக்கு செல்ல நிமிடத்திற்கு ஒரு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
தற்போது இங்கு அன்னபூரணியாக தீடீர் அம்மன் உருவாகி இருக்கிறார். இவரை காண மக்கள் அலைமோதி வருகின்றனர். "பராசக்தி அம்மாவின் திவ்ய தரிசனம், உலக மக்களை காத்து அருள ஆதிபராசக்தி அம்மா அவதாரமாக வந்துவிட்டாள்.. வாருங்க பக்தகோடிகளே" என்று போஸ்டர் அடித்து விளம்பரமும் செய்து வருகின்றனர். இவரிடம் மக்கள் ஆசி பெரும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது.
உருமாறிய சாமி..
செவ்வாடை குரூப்புக்கு போட்டியாக புது மஞ்சள் ஆடை குரூப் வந்துருச்சு போல.. pic.twitter.com/fcvf51uK4P— ஆனந்த் (@anand17m) December 25, 2021
— jai (@J06655627) December 26, 2021
இந்நிலையில் இந்த தீடீர் அன்னபூரணி அம்மா கடந்த வருடம் சொல்வதெல்லாம் உண்மை என்கிற தனியார் சேனல் நடத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. கணவனை விட்டு பிரிந்து தற்போது வேறு ஒரு பெண்ணின் கணவருடன் வாழ்ந்து வருவதாகவும் குற்றசாட்டு எழுந்துள்ளது. இது போன்ற ஒருவரை கடவுளாக அனைவரும் கும்பிட்டு வருகின்றனர் என சமூக வலைத்தளங்களில் சிலர் பதிவிட்டு உள்ளனர்.
"நவம்பர் 2020ல் சொல்வதெல்லாம் உண்மை கட்டப்பஞ்சாயத்தில் கலந்துக் கொண்ட அன்னபூரணி, நவம்பர் 2021ல் ஆதிபராசக்தி அம்மா அன்னபூரணியாக அவதாரம் எடுத்திருக்கிறார். இவர் காலில் விழும் மனிதர்களை என்ன சொல்வது?" என்றும், "சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி டூ ஆதிபராசக்தி அம்மன்.. என்ன ஒரு ட்ரான்ஸ்பர்மேசன்" என்றும் இணையத்தில் கேலி செய்து வருகின்றனர்.
ALSO READ | காற்றில் பறந்து கொரோனா விதிமுறைகள்; ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR