இன்று மலர்கிறது மயிலாடுதுறை மாவட்டம்: நிர்வாக செயல்பாடுகளை துவக்கி வைக்கிறார் EPS

இன்றிலிருந்து மயிலாடுதுறை மாவட்டத்தின் செயல்பாடுகள் அதிகாரப்பூர்வமாக துவங்கும். தமிழக முதல்வர் பழனிசாமி அவர்கள் இன்று காணொலி மூலம் இதை துவக்கி வைப்பார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 28, 2020, 10:33 AM IST
  • தனி மாவட்டமாக மயிலாடுதுறையின் நிர்வாக செயல்பாடுகள் இன்று முதல் தொடக்கம்.
  • முதல்வர் பழனிசாமி காணொலி மூலம் செயப்லாடுகளை தொடக்கி வைக்கிறார்.
  • நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்ட மயிலாடுதுறை நான்கு வருவாய் வட்டங்களை உள்ளடக்கியுள்ளது.
இன்று மலர்கிறது மயிலாடுதுறை மாவட்டம்: நிர்வாக செயல்பாடுகளை துவக்கி வைக்கிறார் EPS title=

இன்று தமிழகத்தின் நிர்வாக செயல்பாடுகளைப் பொறுத்தவரை ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும். தமிழகத்தின் 38 ஆவது மாவட்டமாக பிரிக்கப்பட்ட மயிலாடுதுறையின் நிர்வாக செயல்பாடுகள் மற்றும் அதிகாரப்பூர்வ பணிகளை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று தொடங்கி வைக்கிறார்.

நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்ட மயிலாடுதுறை நான்கு வருவாய் வட்டங்களை உள்ளடக்கியுள்ளது. மடிலாடுதுறையை புதிய மாவட்டமாக பிரிப்பதற்கான அறிவிப்பு 2020 மார்ச் மாதம் 24 ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது. ஏப்ரல் மாதம் 7 ஆம் தேதி இதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.

இன்றிலிருந்து மயிலாடுதுறை மாவட்டத்தின் செயல்பாடுகள் அதிகாரப்பூர்வமாக துவங்கும். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி (Edappadi K Palaniswami) அவர்கள் இன்று காணொலி மூலம் இதை துவக்கி வைப்பார்.

மயிலாடுதுறையை (Mayiladuthurai) தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்துவந்த நிலையில், இன்று முதல் அதிகாரப்பூர்வமாக மயிலாடுதுறை மாவட்டத்தின் நிர்வாக செயல்பாடுகள் தொடங்கவுள்ளன. இதனால் இப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

முன்னதாக, தமிழகத்தில் (Tamil Nadu) 32 மாவட்டங்கள் இருந்தன. சுமுகமான நிர்வாகப் பணிகள், மேன்மையான நிர்வாக கண்காணிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, காஞ்சிபுரத்தில் இருந்து செங்கல்பட்டு, வேலூரில் இருந்து ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரத்தில் இருந்து கள்ளக்குறிச்சி, நெல்லையில் இருந்து தென்காசி ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன. அதே போல், இன்றுமுதல், நாகப்பட்டினம் (Nagapattinam) மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்ட மயிலாடுதுறையின் நிர்வாகப் பணிகளும் செயல்படத் துவங்கும்.

ALSO READ: அரசு கல்வி டிவியில் காவி உடையில் திருவள்ளுவர் போட்டோ: கல்வித்துறை கூறுவது என்ன?

மயிலாடுதுறையின் வடக்கே கொல்லிடம் அருகே கடலூர் மாவட்டமும், தெற்கே கொல்லுமங்குடிக்கு அருகில் திருவாரூர் மாவட்டமும், மேற்கில் ஆடுதுறைக்கு அருகே தஞ்சாவூர் மாவட்டமும், கிழக்கில் வங்காள விரிகுடாவும், தென்கிழக்கில், பொராயருக்கு அருகில் புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டமும் அமைந்துள்ளன. மயிலாடுதுறை பல புவியியல் வளங்களைக் கொண்டுள்ளது. காவிரி ஆறு பாயும் இந்த பகுதிகளில் செழிப்புக்கு குறைவில்லை. பலவித தாவரங்களின் இருப்பிடமாக இருக்கும் இப்பகுதியில் பல அரிய வகை விலங்கினங்களும் கொல்லிடத்தில் பாதுகாக்கப்படுகின்றன.

கலை, கலாச்சார மற்றும் ஆன்மீக சிறப்புகளைக் கொண்டுள்ள மயிலாடுதுறை, பொருளாதாரம், தொழில்துறை, வர்த்தகம் ஆகியவற்றிலும் நல்ல வளர்ச்சியைக் காட்டிவரும் பகுதியென்றால் அது மிகையாகாது. 

ALSO READ: இந்தியாவிலேயே ஒரு தொண்டன் முதல்வராக இருக்கும் ஒரே கட்சி ADMK தான்: EPS

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News