பள்ளிக்கூடங்களில் தூய்மையை கடைப்பிடித்ததில் நாட்டில் 2_வது இடம் தமிழகம்

Last Updated : Sep 1, 2017, 08:16 AM IST
பள்ளிக்கூடங்களில் தூய்மையை கடைப்பிடித்ததில் நாட்டில் 2_வது இடம் தமிழகம் title=

மத்திய மனித மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து பேசினார் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்.

பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், 

இந்தியாவில் உள்ள பள்ளிக்கூடங்களில் தூய்மையை கடைப்பிடித்ததில் நாட்டில் 2_வது இடத்தை தமிழகம் பெற்றுள்ளது. இதற்கான விருது மத்திய அரசு வழங்க உள்ளது. அதனை பெறுவதற்காக டெல்லி வந்துள்ளேன். கடந்த 4 ஆண்டுகளில் தமிழக கல்வித்துறைக்கு மத்திய அரசிடம் ரூ.2,248 கோடியே 79 லட்சம் நிதியை வரவேண்டி உள்ளது. அந்த நிதியை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கோரிக்கை வைத்துள்ளேன்.

பள்ளிக்கூடங்களில் தூய்மையை கடைப்பிடித்ததில் நாட்டில் 2_வது இடத்தை தமிழகம் பெற்றுள்ளதால், அதற்காக விருது வழங்கும் விழா இன்று டெல்லியில் நடைபெறுகிறது. தமிழகம் சார்பில் இந்த விருதை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பெறுவார்.

Trending News