அமெரிக்கா நெபர்வல்லியில் 'மகாத்மா காந்தி மெடலியன் ஆஃப் எக்ஸெலன்ஸ்' பதக்கம் துணை முதல்வர் ஓபிஎஸ்க்கு வழங்கப்பட்டது..!
நெபர்வல்லி: அமெரிக்கா நெபர்வல்லியில் 'மகாத்மா காந்தி மெடலியன் ஆஃப் எக்ஸெலன்ஸ்' பதக்கம் துணை முதல்வர் ஓபிஎஸ்க்கு வழங்கப்பட்டது. ஏற்கனவே தங்கத்தமிழ் மகன் விருது, வளரும் நட்சத்திரம் விருது வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா,சிகாகோவிலுள்ள நெபர்வல்லியில் மெட்ரொபாலிட்டன் பேமிலி சர்வீசஸ் என்ற அமைப்பு சார்பில் மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு ”மாகாத்மா காந்தி மெடலியன் ஆஃப் எக்ஸெலன்ஸ்” பதக்கம் அந்த அமைப்பின் நிறுவனரால் வழங்கப்பட்டது.இதனைதொடர்ந்து சிகாகோ நகரிலுள்ள இந்திய துதகரத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்றார்.
இதில் இந்திய தூதகர அதிகாரி சுதாகர் தலேலா,தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவிந்திர நாத் ,தமிழக நிதி துறை முதன்மை செயலாளர் கிருஷ்ணன் மற்றும் சிகாகோ தமிழ் தொழில் முனைவோர் அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர். இதை தொடர்ந்து, தமிழக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில்; இந்தியாவுக்கும் அமெரிக்காவும் நீண்ட காலமாக பொருளாதாரம், வர்த்தகம், வாணிபம், தொழில்நுட்பம், எரிசக்தி மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவைகளில் நல்லுறவு உள்ளதாக தெரிவித்தார்.
இந்த "International Rising star of the year -Asia" விருதினை பணிவன்போடு சமர்ப்பிக்கிறேன். மாண்புமிகு அம்மா அவர்கள் விருது பெற்ற சிகாகோ மண்ணில் விருது பெறும் இந்நெகிழ்ச்சியான வேளையில், தமிழக மக்களின் பேரன்பிற்கு தலைவணங்கி மென்மேலும் தமிழக மக்களின் வளர்ச்சிக்காக உழைத்திட விழைகிறேன். pic.twitter.com/GZ3gvtIgaw
— O Panneerselvam (@OfficeOfOPS) November 11, 2019
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதி நவீன ரயில்கள், தொழில் தொடங்க ஏதுவான சூழ்நிலை பல்வேறு முன்னணி தொழில் நிறுவனங்களின் கிளைகள் தமிழகத்தில் செயல்படுவதாக குறிப்பிட்ட ஓ.பன்னீர்செல்வம், தமிழகத்தில் தொழில் தொடங்க உலகத் தமிழர்கள் முன்வர வேண்டும் எனவும் துணைமுதல்வர் வேண்டுகோள் விடுத்தார்.