தமிழகத்தில் மணல் திருட்டு அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இதனால இயற்கை வளங்கள் பாதிக்கப்படுகின்றன. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி பொதுநல வழக்கு ஒன்று மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் போடப்பட்டது.
இந்த மனு மீதான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது வழக்கை விசாரித்த மதுரை நீதிமன்றம், மணல் திருட்டில் ஈடுபடும் போது பிடிபடும் வாகனங்களை பறிமுதல் செய்யவேண்டும். மணல் திருட்டில் ஈடுபட்டவர்களுக்கு அபதாரம் விதித்து, அந்த தொகையை பெற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் பறிமுதல் செய்யப்பட வாகனங்களை, அவர்களிடம் திருப்பி ஒப்படைக்ககூடாது. அதேபோல மணல் திருட்டில் மாட்டுவண்டிகள் ஈடுபட்டு பிடிபட்டால், அபதாரம் பெற்றுக்கொண்டு, மாடுகளை மட்டும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கலாம். மாட்டு வண்டியை ஒப்படைக்ககூடாது.
மேலும் இந்த வழக்கு சம்பந்தமாக தமிழக உள்துறை செயலர் மற்றும் கலெக்டர்களுக்கு உத்தரவிட்டது மதுரை கிளை உயர்நீதிமன்றம்.