6 பேர் கொண்ட கும்பலால் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வெட்டி படுகொலை

ஜெயங்கொண்டத்தில் முன்விரோதம் காரணமாக வழக்கறிஞர் ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 7, 2022, 05:37 PM IST
  • வழக்கறிஞர் வெட்டிக் கொலை
  • முன்விரோதம் காரணம் என தகவல்
6 பேர் கொண்ட கும்பலால் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வெட்டி படுகொலை title=

தஞ்சாவூர் மாவட்டம் நாச்சியார் கோவிலைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருக்கு சாமிநாதன், மாரியப்பன் என இரண்டு மகன்களும், தையல்நாயகி என்ற ஒரு மகளும் உள்ளனர். இதில் மகள் தையல் நாயகிக்கு அரியலூர் மாவட்டம் அணைகுடம் கிராமத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் திருமண நடைபெற்றது. திருமணத்திற்கு வந்திருந்த சாமிநாதன் மண்டபத்திற்கு எதிரே இருந்த பெட்டி கடைக்கு வந்துள்ளார். 

அப்போது மூன்று இருசக்கர மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் சாமிநாதனை சரமாரியாக கழுத்துப் பகுதியில் அறிவாளால் வெட்டி சாய்த்தனர். இதில் நாற்காலியில் அமர்ந்திருந்த சாமிநாதன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். உடனே திருமணத்திற்கு வந்தவர்கள் எல்லாம் அதிர்ச்சியில் உறைந்துபோயினர். கொலை குறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் டிஎஸ்பி கலை கதிரவன், சாமிநாதனின் உடலை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

மேலும் படிக்க: திமுகவுடனான உறவை ஓபிஎஸ் பகிரங்கப்படுத்திவிட்டார்: இபிஎஸ் குற்றச்சாட்டு 

சகோதரி திருமணத்திற்கு வந்த சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரை மர்ம கும்பல் சுற்றி வளைத்து வெட்டிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது.முன்னெச்சரிக்கையாக காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், கொலை குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் படிக்க: எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக தீர்ப்பு: பொதுச்செயலாளராக தொடர்கிறார் இபிஎஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News