13 வயது சிறுமி 7 மாத கர்ப்பம்... கருக்கலைப்புக்கு அனுமதி வழங்கிய நீதிமன்றம்!

7 மாத கர்ப்பிணியாகவுள்ள 13 வயது சிறுமிக்கு கருவை களைப்பதற்கு அனுமதியளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

Written by - Geetha Sathya Narayanan | Last Updated : Jul 20, 2022, 03:49 PM IST
  • பிரசவத்தை தாங்கும் அளவு அச்சிறுமியின் மன வலிமை, உடல் வலிமை இல்லை
  • ஒருவேளை குழந்தையை பெற்றெடுத்தால் அச்சிறுமி மட்டும் இல்லாமல் மொத்த குடும்பமே பாதிப்படையும்
13 வயது சிறுமி 7 மாத கர்ப்பம்... கருக்கலைப்புக்கு அனுமதி வழங்கிய நீதிமன்றம்! title=

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த விவசாயி குடும்பத்தில் பிறந்த 13 வயது சிறுமிக்கு சில மாதங்களுக்கு முன்பு பாலியல் ரீதியான வன்கொடுமை நிகழ்ந்தது. தினசரி உணவுக்கே திண்டாடும் அடித்தட்டு குடும்பத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட சிறுமி இந்த நிகழ்வுக்குப் பின் கர்ப்பமடைந்துள்ளார். 

இதனால் பல இக்கட்டான சூழ்நிலையில் சிறுமியின் பெற்றோர் மருத்துவரிடம் அச்சிறுமிக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், தற்போது சிறுமி 28 வாரம் கர்ப்பமாக இருக்கிறார். ஆனால் சிறுமியின் மருத்துவர் சிறுமி பிரசவத்திற்கு முழு ஆரோக்கியத்துடன் இல்லை என்றும், மன அளவில் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனால் சிறுமியின் தந்தை தனது மகளின் உடல்நலன் கருதி கருக்கலைப்புக்காக மருத்துவரை அனுகியுள்ளார். 

மேலும் படிக்க | ITR: வருமான வரி தாக்கல் செய்ய தேவையான ஆவணங்களின் முழு விபரம் இதோ

ஆனால் 1971 ஆம் ஆண்டு வகுக்கப்பட்ட இந்திய சட்டத்தின்படி ஒரு பெண்ணின் கருக்கலைப்பானது 20 வாரங்களுக்குள் செய்யப்படுவது ஏற்றுக்கொள்ளப்படும். மேலும் 20 வாரங்களை தாண்டிய கர்ப்பிணிகள் கருக்கலைப்பு செய்வதற்கு நீதிமன்றத்தில் அனுமதி பெறவேண்டும் என்பது சட்டமாக உள்ளது.

அதிலும், கர்பிணியின் உடல் நலம், கருக்கலைப்புக்கான காரணம் குறித்து நீதிமன்றம் தீர ஆராய்ந்தப் பின்புதான் இந்த அனுமதியையும் வழக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு கர்ப்பமடைந்த 13 வயது சிறுமிக்கு கருக்கலைப்பு செய்வதற்கு அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சிறுமியின் தந்தை மனு அளித்துள்ளார்.

இதையடுத்து இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் நீதிபதி அப்துல் குத்தோஸ், அரசியலமைப்பு 226வது பிரிவின் கீழ் சிறுமியின் 28 வார கர்ப்பத்தை கலைக்க அனுமதி வழங்கியது. மேலும், சிறுமியின் உடல் நலத்தையும், மன நலனையும் கருத்தில் கொண்டு இத்தீர்ப்பு வழங்கப்படுகிறது என்று நீதிபதி தெரிவித்தார்.

மேலும், பிரசவத்தை தாங்கும் அளவு அச்சிறுமியின் மன வலிமை, உடல் வலிமை இல்லை என்பதாலும், ஒருவேளை குழந்தையை பெற்றெடுத்தால் அச்சிறுமி மட்டும் இல்லாமல் மொத்த குடும்பமே பாதிப்படையும் என்பதாலும் இந்த அனுமதி வழங்கப்படுவதாக நீதிபதி தெரிவித்தார்.

மேலும் படிக்க |  TDS New Rule: ஜூலை 1 முதல் புதிய விதிகள் அமலுக்கு வரும், முழு விவரம் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News