மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க. அழகிரி மதுரையில் இன்று தனது ஆதரவாளர்களுடன் சந்தித்து பேசினார்.
முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்கள் கடந்த ஆக., 7-ஆம் நாள் உடல்நிலை குறைவால் காலமானதை அடுத்து, திமுக தலைவர் பொறுப்பிற்கான தேர்தல் வரும் ஆகஸ்ட் 28 ஆம் நாள் நடைபெறவுள்ளது.
வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி மறைந்த திமுக தலைவர் மு. கருணாநிதி சமாதியை நோக்கி பேரணி செல்ல உள்ளதாக, அவரது மூத்த மகன் மு.க அழகிரி அறிவித்திருந்தார். இதுக்குறித்து கடந்த 22 ஆம் தேதி மாலை மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மு.க. அழகிரி, "நேரம் வரும்போது எனது ஆதங்கத்தை வெளிப்படுத்துவேன். சென்னையில் நடைபெறுவுள்ள பேரணியில் 10,0000 பேர் பங்கேற்கவுள்ளனர். தற்போதைய திமுக-வில் என்னை சேர்பது போல் தெரியவில்லை. செப்டம்பர் 5-ஆம் தேதி பேரணிக்கு பின்னர் அடுத்தகட்ட முடிவை அறிவிப்பேன் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று மதுரையில் தனது ஆதரவாளர்களை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி நடைபெறும் பேரணியை பற்றி விவாதிக்கப்பட்டது என தெரிகிறது.
#TamilNadu: MK Alagiri, expelled DMK leader and son of M Karunanidhi held a meeting with his supporters in Madurai, today pic.twitter.com/Xo6j7cJe0m
— ANI (@ANI) August 24, 2018