திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் பாதயாத்திரை பக்தர்களின் 400 வருடத்திற்கு மேலான பாரம்பரியம் மிக்க வேல் காணாமல் போனதெல்லாம் பக்தர்கள் மனம் வருத்தம் அடைந்து உள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வழியாக பழனி பாதயாத்திரை சென்ற காரைக்குடியை (நெற்குப்பை கட்டளை காவடி) சேர்ந்த செட்டியார்கள் (பக்தர்கள்) சமுத்ரா பட்டியில் தங்கியிருந்த போது தாங்கள் கொண்டு வந்த 400 வருடத்திற்கு மேலான பாரம்பரியம் மிக்க வேல் - யை காணவில்லை. இதுகுறித்து நத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். நத்தம் காவல்துறையினர் விசாரணை செய்தும் வருகிறார்கள்.
ALSO READ | ஜல்லிக்கட்டு; அவனியாபுரத்தில் 24 காளைகளை அடக்கிய இளைஞர்..! முதலமைச்சர் வழங்கிய கார் பரி
இந்த வேல் சென்று தான் நகரத்தார் காவடிகள் அனைத்தும் இடும்பன் குளத்தில் ஒன்று சேர்வார்கள். பின்பு பழனி மலையின் மூலஸ்தானத்தில் வைத்து அபிஷேகம் செய்யும் கட்டளை காவடியுடன் வரும்.வேல் காணவில்லை என்பதால் காவடி எடுத்து செல்லும் பக்தர்களும் மாலை போட்டு பக்தர்களும் மிகுந்த மன வேதனையில் உள்ளனர் . கிடைத்தால் மட்டுமே அபிஷேகம் நடைபெறும் என்பதால் பக்தர்கள் வேதனை உள்ளனர்.வேல் கிடைக்க வேண்டும் என்று முருகனை மனம் உருகி வேண்டி வருகிறார்கள்.
ALSO READ | உழவர் தினத்தில் தத்ரூபமான ரங்கோலி ஓவியங்களால் அசத்திய புதுச்சேரி கலைஞர்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR