Lok Sabha Elections: 2024 மக்களவைத் தேர்தல், ஏப்ரல் 19 முதல் ஏழு கட்டங்களாக நடத்தப்பட திட்டமிடப்பட்டு இன்று ஏழாவது கட்ட வாக்குப்பதிவு நடந்துகொண்டு இருக்கின்றது. கோடையில் வெப்பம் அதிகரித்தாலும், மக்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகிறார்கள். இன்ரைய வாக்குப்பதிவு முடிந்த பின்னர், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகும். வாக்கு எண்ணிக்கை 4ஆம் தேதி நடக்கவுள்ளது.
இந்த நிலையில், 2014 நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைப்பெர்றது. இதில் அதிமுக அமைப்புச் செயலாளர் ஓ எஸ் மணியன் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினார்.
நாட்டின் 18 ஆவது நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில் நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கையின் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் எண்ணிக்கை மையத்தின் உள்ளே இருக்கும் கட்சியின் முகவர்கள் எவ்வாறு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும், வாக்குப்பதிவு இயந்திரத்தை பிரித்து எண்ண ஆரம்பிக்கும் பொழுது கவனிக்க வேண்டிய நடைமுறைகள் ஒவ்வொரு சுற்று முடிவிலும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் மயிலாடுதுறை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் எஸ் பவுன்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தஞ்சை கிழக்கு மாவட்ட செயலாளர் P.V.பாரதிமோகன், அதிமுக வேட்பாளர் பி பாபு மயிலாடுதுறை தொகுதியைச் சேர்ந்த ஒன்றிய செயலாளர்கள் நகராட்சி செயலாளர்கள் பேரூராட்சி செயலாளர்கள் பிற அணி பொறுப்பாளர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற முன்னாள் அமைச்சரும் அதிமுக அமைப்பு செயலாளர் திரு. ஓ எஸ் மணியன் வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதிய மடலை வாசித்துக் காண்பித்து விழிப்புணர்வுடன் வாக்கு எண்ணிக்கை மையத்தில் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ