Lockdown 4: தமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும்.. விரைவில் அறிவிப்பு

தமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படுவது குறித்து விரைவில் அறிவிப்புகள் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. இதுக்குறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

Written by - Shiva Murugesan | Last Updated : May 15, 2020, 11:08 AM IST
  • தமிழகத்தில் பேருந்துகளை சுத்தம் செய்யும் வேலைகள் துவங்கியுள்ளது
  • 4 ஆம் கட்ட ஊரடங்கு புதிய வடிவில் இருக்கும் என்று பிரதமர் மோடி
  • தமிழகத்திலும் பேருந்து இயக்குவது குறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் ஆலோசனை.
  • ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு கையுரை மற்றும் முககவசம், கிருமிநாசினி பாட்டில்கள்.
  • தமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படுவது குறித்து விரைவில் அறிவிப்புகள் வெளியாகும்.
Lockdown 4: தமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும்.. விரைவில் அறிவிப்பு title=

சென்னை: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. இதனால் விமானம், ரயில் மற்றும் பேருந்துகள் இயக்கத் தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக அனைத்து மாநிலங்களிலும் பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. தற்போது மக்கள் பயன்பாட்டிற்கு பொது போக்குவரத்து தயாராகி வருகிறது. அதாவது தமிழகத்தில் பேருந்துகளை சுத்தம் செய்யும் வேலைகள் துவங்கியுள்ளது. அதனால் விரைவில் தமிழ் நாட்டில் அரசு பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிகிறது. இன்னும் இதுக்குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாக வில்லை.

இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக் மார்ச் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. ஊரடங்கு காலத்தை படிப்படியாக நீட்டித்து, இரண்டு மற்றும் மூன்று முறை ஊரடங்கு காலம் நீட்டித்தது மத்திய அரசு. மே 17 ஆம் தேதி வரை மூன்றாவது ஊரடங்கு காலம் இருக்கும். இந்த காலத்தில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.

தற்போது நடைமுறையில் இருக்கும் மூன்றாவது ஊரடங்கு காலம் முடிவடைந்ததும், மீண்டும் ஊரடங்கு (Lockdown 4) நீட்டிக்கப்படும். ஆனால் அதில் மேலும் சில தளர்வுகள் அளிக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் 4 ஆம் கட்ட ஊரடங்கு புதிய வடிவில் இருக்கும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

பிரதமர் மோடி கூற்றுப்படி, 4 ஆம் கட்ட ஊரடங்கில் பொது போக்குவரத்தை இயங்க அனுமதி கிடைக்கும் என எதிபார்க்கப்படுகிறது. விமானம், ரெயில் மற்றும் பஸ் போக்குவரத்து சில கட்டுப்ப்பாடுகளுடன் தொடங்கும் என தகவல் வந்துள்ளன. 

இதனால் பல மாநிலங்கள் பொது போக்குவரத்துக்கு தயாராகி வருகின்றன. அதேபோல தமிழகத்திலும் பேருந்து இயக்குவது குறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

கொரோனா தொற்று பாதிப்பு அடிப்படையில், அந்தந்த பகுதிகளுக்கு பேருந்து இயக்கப்படும் எனத் தெரிகிறது. எனவே நீண்ட இடைவேளைக்கு பின்னர் மீண்டும் இயக்க தமிழக அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் உள்ள பேருந்துகளை சுத்தம் செய்யும் பணி தொடங்கியுள்ளது. மேலும் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு கையுரை மற்றும் முககவசம், கிருமிநாசினி பாட்டில்கள் வழங்கப்பட்டு வருகிறது எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

Trending News