ஸ்ரீரங்கம் தேரோட்டம்: திருச்சி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை!

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் தேரோட்டம் நடப்பதை முன்னிட்டு திருச்சி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை.

Last Updated : May 2, 2019, 11:53 AM IST
ஸ்ரீரங்கம் தேரோட்டம்: திருச்சி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை! title=

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் தேரோட்டம் நடப்பதை முன்னிட்டு திருச்சி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய திருவிழாவான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் தேரோட்டம் நாளை நடைபெற இருக்கிறது. இதையொட்டி, நாளைய தினம் திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் சிவராசு அறிவித்துள்ளார். 

இந்நிலையில் அன்றைய தினம் அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு மே 18ம் தேதி பணிநாளாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News