தமிழகத்தில் கடந்த ஆண்டைவிட இந்த புத்தாண்டிற்கு மது விற்பனை குறைவு!

தமிழகத்தில் புத்தாண்டு தினத்தில் மது விற்பனை கடந்த ஆண்டை விட, இந்தாண்டு சுமார் ரூ.11 1/2 கோடி குறைந்துள்ளது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 2, 2022, 01:18 PM IST
தமிழகத்தில் கடந்த ஆண்டைவிட இந்த புத்தாண்டிற்கு மது விற்பனை குறைவு! title=

பண்டிகை என்றாலே அனைவருக்கும் கொண்டாட்டம் தான், அதிலும் குறிப்பாக மதுபிரியர்களின் கொண்டாட்டம் பற்றி சொல்லவே வேண்டாம்.  துணிக்கடை, நகைக்கடை போன்ற பல கடைகளிலும் மக்கள் கூட்டம் எவ்வாறு அலைமோதுமோ அந்த அளவிற்கு, டாஸ்மாக்கில் எண்ணிலடங்கா கூட்டம் அலைமோதும்.  மது இருந்தால் தான் ஒரு பண்டிகையே முழுமையடையும் என்ற அளவிற்கு சூழல் மாறியுள்ளது.

ALSO READ | Men Only: ஆண்கள் மட்டும் பங்கேற்ற பாரம்பரிய அசைவ பந்தி திருவிழா

அதிலும் புத்தாண்டு நாளில் மதுபிரியர்களின் கொண்டாட்டம் எல்லையற்றது.  ஒவ்வொரு வருடமும் பலவிதமான மதுபானங்களை அருந்தி புது வருடத்தை வரவேற்று மகிழ்வார்கள்.  அதேபோல இந்த வருடமும்(2022) புத்தாண்டிற்கு முதல் நாளான டிசம்பர் -31 அன்று டாஸ்மாக்கில் பலரும் மதுபானங்களை கேஸ் கேஸாக வாங்கி சென்று அருந்தி மகிழ்ந்தனர்.  இருப்பினும் கடந்த ஆண்டை விட இந்தாண்டு மது விற்பனை குறைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  இந்த விற்பனை வீழ்ச்சி குறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறுகையில், கடந்த புத்தாண்டில்(2021) தமிழகம் முழுவதும் மது விற்பனை சுமார் ரூ.159 கோடிக்கு விற்கப்பட்டது.  இதில் சென்னை மண்டலத்தில் ரூ.48.75 கோடிக்கும், திருச்சி மண்டலத்தில் ரூ.28.10 கோடிக்கும், சேலம் மண்டலத்தில் ரூ.26.49 கோடிக்கும், மதுரை மண்டலத்தில் ரூ.27.30 கோடிக்கும், கோவை மண்டலத்தில் ரூ.28.40 கோடிக்கும் விற்கப்பட்டது.

tasmac

ஆனால் இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடை காரணமாக விற்பனை மந்தமாகவே நடைபெற்றுள்ளது.  கடந்த டிசம்பர்-31,2021 அன்று தமிழகம் முழுவதும் மது விற்பனை ரூ.147 கோடியே 69 லட்சத்திற்கு விற்கப்பட்டது.  அதில் சென்னை மண்டலத்தில் ரூ.41.45 கோடிக்கும், திருச்சி மண்டலத்தில் ரூ.26.52 கோடிக்கும், சேலம் மண்டலத்தில் ரூ.25.43 கோடிக்கும்,மதுரை மணடலத்தில் ரூ.27.44 கோடிக்கும், கோவை மண்டலத்தில் ரூ.26.85 கோடிக்கும் விற்பனை நடந்துள்ளது.

இந்த விற்பனையை கடந்த ஆண்டுடன் ஒப்பீட்டு பார்க்கையில், இந்த ஆண்டு ரூ.11 கோடியே 31 லட்சம் குறைந்துள்ளது.  மொத்த ஆண்டை கணக்கிட்டு பார்க்கையில் 1.69 % இந்த ஆண்டு குறைந்துள்ளது.  பீர் விற்பனையும் 5.58% குறைந்துள்ளது.  ஒவ்வொரு ஆண்டின் புது வருடத்திலும் விற்கப்படும் மதுவின் அளவானது, கடந்த ஆண்டை விட அதிகமாகவே இருக்கும்.  ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாவே இவற்றின் விற்பனை அளவு, அதற்கு முன்னர் உள்ள ஆண்டுகளை விட குறைந்தே காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | ஒமிக்ரான் எதிரொலி : இன்று முதல் மெரினா கடற்கரைக்கு செல்ல தடை!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News