சேலம் மாவட்டத்தில் லேசான நில அதிர்வு; மக்கள் பீதி!

ஓமலூர், கமலாபுரம், மேச்சேரி பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது!!

Last Updated : Jul 22, 2018, 10:48 AM IST
சேலம் மாவட்டத்தில் லேசான நில அதிர்வு; மக்கள் பீதி!  title=

ஓமலூர், கமலாபுரம், மேச்சேரி பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது!!

சேலம் மாவட்டத்தில் ஓமலூர், தாரமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று காலை லேசான நில அதிர்வு உணரப்பட்டது. நில அதிர்வு ஏற்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் அச்சத்தில் வீட்டைவிட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
 
மேட்டூர் அணையில் நீர்மட்டம் உயரும் போது இது போன்று நில அதிர்வு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ஓமலூர் பகுதியில் நில அதிர்வு ஏற்படுவதற்கு முன்பு பலத்த வெடி சத்தம் கேட்டதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் ஏற்பட்ட நில அதிர்வு ரிக்டர் அளவில் 3.3 ஆக பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், நில அதிர்வு காரணமாக சேலம் மாவட்டத்தில் எங்கும் பாதிப்புகள் ஏற்படவில்லை என்றும் ஜன்னல், கண்ணாடி, கதவுகள், அலமாரிகள், பாலங்கள் விளம்பர பலகைகள் அருகே நிற்க வேண்டாம் எனவும் 
இயற்கை இடர்பாடுகள் குறித்த தகவலுக்கு 1077 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

Trending News