எங்களுக்கு சின்னம் முக்கியமல்ல.. எங்கள் அண்ணன் சீமானே சின்னம்.. நாம் தமிழர் கட்சி!

தற்போதைய கோவை எம்பி பிஆர் நடராஜனை காணவில்லை என பல்லடத்தில் நாம் தமிழர் கட்சியின் கோவை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு வைத்துள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Mar 5, 2024, 09:51 AM IST
  • எங்களுக்கு சின்ன முக்கியமல்ல.
  • நம் எங்கள் அண்ணன் சீமானே சின்னம்.
  • கோவை தொகுதி வேட்பாளராக கலாமணி அறிமுகம்.
எங்களுக்கு சின்னம் முக்கியமல்ல.. எங்கள் அண்ணன் சீமானே சின்னம்.. நாம் தமிழர் கட்சி! title=

திருப்பூர் மாவட்டம் பல்லடம் என் ஜி ஆர் சாலையில் நாம் தமிழர் கட்சியின் கோவை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் அறிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. வான்மதி வேலுச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அக்கட்சியின் கோவை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் அறிமுகப்படுத்தப்பட்டார். மேலும் நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர்கள் வேட்பாளரை ஆதரித்து அறிமுகப்படுத்தி அங்கு திரண்டிருந்த கூட்டத்தின் மத்தியில் பேசினர். அதனைத் தொடர்ந்து வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது, தற்போதைய கோவை நாடாளுமன்ற எம் பி பிஆர் நடராஜனை தான் பார்த்தது கூட இல்லை என்றும் தொகுதி முழுக்க எங்கு தேடியும் அவரை காணவில்லை என்றும் புகார் கூறினார். 

மேலும் படிக்க | மாணவிகள், ஆசிரியைகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கல்லூரி முதல்வரை கைது செய்யக்கோரி போராட்டம்

மேலும் கடந்த 2021 ஆம் ஆண்டில் தொண்டாமுத்தூர் தொகுதியில் தான் போட்டியிட்டதாகவும், தற்போது நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்த அவர் தங்களுக்கு கட்சியின் சின்னம் முக்கியமல்ல என்றும் அண்ணன் சீமானே தங்களது சின்னம்தான் என்றும் அவர் பெருமிதம் தெரிவித்தார். மேலும் நான் வெற்றி பெற்றால் மற்ற கட்சிகளைப் போல அதைச் செய்வேன் இதைச் செய்வேன் என்று சொல்ல மாட்டேன் செயலில் காட்டுவோம் என்றும் அவர் தெரிவித்தார்.  மேலும், மயிலாடுதுறை பாராளுமன்ற நாம் தமிழர் கட்சி வேட்பாளர் காளியம்மாள் சீர்காழியில் அவரது பிரச்சாரத்தை துவக்கினார். சீர்காழி நகரப் பகுதியில் அமைந்துள்ள தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்த காளியம்மாள் பின்னர் தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த காளியம்மாள் கூறியதாவது, மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக நான் போட்டியிடுகிறேன். சிறு வயது முதல் இந்த மண்ணில் பல்வேறு  பொதுமக்கள் பிரச்சினைகளை பார்த்து வருகிறேன். இந்த மண்ணில் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்ற அதிமுக, காங்கிரஸ், திமுக கட்சியை சார்ந்த வெற்றி பெற்றவர்களாலும்  இந்த பகுதி மக்களின் பிரச்சினைகள் தீர்ந்த பாடில்லை. அதுவும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற திமுக எம்.பி. காணவில்லை என்று சுவரொட்டிகளை காண முடிகிறது. இவ்வளவு பிரச்சினைகள் உள்ளபோது காவிரி பிரச்சனை, ஹைட்ரோ கார்பன்,  ஆகிய பிரச்சினைகளுக்கு இவர்கள் பாராளுமன்றத்தில் பேசப்போவதில்லை. அதனால்  நம் பிரச்சனைக்கு நாம்தான் குரல் கொடுக்க வேண்டும் என மக்களின்  ஒருவராக சாதாரண குடும்பத்தில் பிறந்த நான் இந்த தொகுதியில் போட்டியிடுகிறேன்.

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இந்த அரசு கொடுக்கவில்லை. வளம் சார்ந்த தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளது. இதனை நெறிப்படுத்தினாலே இப்பகுதியில் பொருளாதார பிரச்சனை, விவசாய பிரச்சனை, இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு பிரச்சனைகள் தீர்க்கப்படும். இப்பகுதியில் பகுதி நிலம் வளம் சார்ந்த தொழிற்சாலைகள், பால் பண்ணைகள், பஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளது. அவைகள் திறக்கப்பட்டு வேலைவாய்ப்பு வழங்கிட உறுதி செய்வோம். 100 நாள் வேலை திட்டத்தில் வருடத்திற்கு ஆறு நாள் மட்டுமே வேலைகள் வழங்கப்படுகிறது. பெண்களுக்கான வேலை வாய்ப்பு உறுதி செய்ய வேண்டும். கடற்கரை பகுதியில் மக்களுக்கான அடிப்படை வசதிகள் இன்னும் செய்து தரப்படவில்லை. கடலில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு 4.5 லட்சம் ஹெக்டேர் கடல் பரப்பை விற்று விட்டதாக  கூறுகிறார்கள். இது குறித்த பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பேசவில்லை என  ஆவேசமாக தெரிவித்தார்.

மேலும் படிக்க | பிரதமர் இந்த காரணத்திற்காக தான் தமிழகம் வருகிறார் - முதல்வர் ஸ்டாலின்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News