உயிரைப்பறித்த டீன்-ஏஜ் காதல்! கடற்கரையில் ஒதுங்கிய 2 பிணங்கள்..கொலையா? தற்கொலையா?

Teenagers Body Found In Tiruvottiyur Beach : சென்னை திருவொற்றியூர் கடற்கரையில் ஒரு சிறுவன் மற்றும் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது கொலையா? தற்கொலையா? முழு விவரம், இங்கே.

Written by - JAFFER MOHAIDEEN | Edited by - Yuvashree | Last Updated : May 26, 2024, 03:12 PM IST
  • உயிரைப்பறித்த டீன்-ஏஜ் காதல்
  • கரை ஒதுங்கிய 2 பிணங்கள்
  • கொலையா? தற்கொலையா?
உயிரைப்பறித்த டீன்-ஏஜ் காதல்! கடற்கரையில் ஒதுங்கிய 2 பிணங்கள்..கொலையா? தற்கொலையா? title=

Teenagers Body Found In Tiruvottiyur Beach : டீன்-ஏஜ் காதல், சிறுவன்-சிறுமியின் உயிரை பறித்த அதிர்ச்சி சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. நேற்று, சென்னை திருவொற்றியூர் கடற்கரையில் இருவரின் உடல் தண்ணீரில் மிதப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்ததன் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். 

தண்ணீரில் மிதந்த பிணங்கள்:

சென்னை திருவொற்றியூர் தாங்கல் பகுதியில் உள்ள கடற்கரையில் இரண்டு உடல்கள் கடலில் மிதப்பதாக மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் காவல்துறைக்கு தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர் சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் மீனவர்கள் உதவியுடன் சிறிய படகில் சென்று கடலில் மிதந்து கொண்டிருந்த இரண்டு உடல்களையும் கரைக்கு கொண்டு வந்தனர்.

மேலும் படிக்க | சென்னையில் தலைதூக்கும் போதை கலாச்சாரம்! சிறுவன் பலி! ஷாக்கிங் ரிப்போர்ட்!

அந்த உடல்கள், சென்னை மாதாவரம் பால்பண்பை பகுதிக்கு உட்பட்ட இடத்தில் வசிக்கும் ஸ்ரீசாந்த் வயது 14 மற்றும் சந்தியா வயது 16 என தெரியவந்தது. இருவரும் கையில்  துப்பட்டா கட்டிக் கொண்டு கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

தற்கொலையா? 

மாதாவரம் பால் பண்ணை காவல் நிலையத்தில்  இருவரையும் காணவில்லை என்று புகார் அளித்திருந்த நிலையில் இருவரும் திருவொற்றியூர் பகுதியில் உள்ள கடற்கரையில் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கையில் துப்பட்டாவால் இருவரும் ஒருவரை ஒருவர் கட்டிக்கொண்டு உயிர் இழந்திருப்பது குறித்து  திருவொற்றியூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இருவரின்  உடலை கைப்பற்றி அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு உடற்கூறுவு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் இருவரின் உறவினர்கள் இவர்களது உடல்களை பார்த்து கதறி அழும் காட்சி சோகத்தை ஏற்படுத்தியது. 

மேலும் படிக்க | திருப்புவனம் ராமலிங்கம் கொலை வழக்கு : துப்பு கொடுத்தால் ரூ.25 லட்சம் பரிசு... கோவையில் NIA போஸ்டர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News