கூடங்குளம் அணுவுலையிலிருந்து வரக்கூடிய அணுக்கழிவுகளை கையாள்வதற்காக அணுவுலை அருகில் “அணுக்கழிவு மையத்தை” இன்னும் அமைக்கவில்லை, அணுக்கழிவுகளை நிரந்திரமாக கையாள ஆழ்நில அணுக்கழிவு மையத்தை எங்கே அமைப்பது என்றும் முடிவாகவில்லை.
ஆனால் கூடங்குளத்தில் 5&6 உலைகளுக்கான பணிகளை துவக்கியுள்ளது வேதனையளிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கவலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்:-
கூடங்குளத்தில் தற்போது இயங்கி வரும் 1 & 2 ஆகிய அணு உலைகளை தவிர்த்து கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் 3 & 4 அணு உலைகளுக்கான நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்துவதோடு, தற்போது துவங்கப்பட்டுள்ள 5 & 6 வது அணு உலைகளுக்கான பூர்வாங்க பணிகளையும் உடனடியாக கைவிட ...
— கே.பாலகிருஷ்ணன் - K Balakrishnan (@kbcpim) July 2, 2021
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அணுமின்சாரம் தயாரிப்பதற்கான இரண்டு அணு உலைகள் ஏற்கனவே இயங்கி வருகிறது. அதை ஒரு அணு உலை பூங்காவாக மாற்றுவதற்கான திட்டத்தோடு, அடுத்தடுத்த அணு உலைகளை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகளையும் பா.ஜ.க. அரசு தொடர்ச்சியாக எடுத்து வருகிறது. இந்நிலையில் 5 மற்றும் 6-வது அணு உலைகளையும் நிர்மாணிப்பதற்கான இடம் தற்போது தேர்வு செய்யப்பட்டு பணிகள் துவங்க உள்ளதாகவும், அதற்கு அணுசக்தி துறையின் ஒப்புதல் கிடைத்துள்ளதாகவும் செய்திகள் வருகின்றன.
கூடங்குளத்தில் தற்போது இயங்கி வரும் 1 & 2 ஆகிய அணு உலைகளை தவிர்த்து கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் 3 & 4 அணு உலைகளுக்கான நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்துவதோடு, தற்போது துவங்கப்பட்டுள்ள 5 & 6 வது அணு உலைகளுக்கான பூர்வாங்க பணிகளையும் உடனடியாக கைவிட வேண்டும் என ஒன்றிய பாஜக அரசை வலியுறுத்துவதுடன், கூடன்குளத்தில் அணு உலை பூங்கா அமைக்கும் பணிகளை நிறுத்துவதற்கான அனைத்து முயற்சிகளில் தமிழக அரசும் இணைந்து நிற்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்” என்று அறிக்கை கூறுகிறது.
Also Read | Martial Arts: சிலம்பம் சுற்றி மணவாழ்க்கையை தொடங்கும் மணமகள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR