கரூர் மாவட்டம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கரூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.  

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 29, 2022, 03:58 PM IST
  • விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
  • மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டம்
கரூர் மாவட்டம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் title=

கரூர் மாவட்டத்தில் ஜூலை மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 29 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணியளவில் கலெக்டர் தலைமையில் கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் என்று கடந்த ஜூலை 26 ஆம் தேதியன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் தலைமையில் வேளாண்மைத்துறையின் மூலம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று காலை நடைபெற்றது . 

இன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், குடகனாறு நீர் பங்கீடு தொடர்பான வல்லுநர் குழு அறிக்கை வெளியிட கோருதல், நீரா பானத்திற்கு உரிமம் பெற விதித்திருக்கும் நிபந்தனைகளை தளர்த்த எளிமைப்படுத்த கோருதல், கோயம்புத்தூரில் நடைபெறும் கொடிசியா கண்காட்சிக்கு வேளாண்மைத்துறை மூலம் விவசாயிகளை அழைத்துச் செல்லக் கோருதல், 2020 ஆம் ஆண்டு துவரை பயிருக்கு காப்பீடு தொகை வேண்டுதல், வேளாண்மை பொறியியல் துறை மூலம் உழவு இயந்திரம் வாடகைக்கு கிடைப்பது தாமதமாவது, மயாணம் அருகே சாலை அமைத்து தரக்கோருதல், இராஜேந்திரம் ஊராட்சியில் உள்ள பழைய சாலைகளை புதுப்பித்து தரக்கோருதல், கருங்காலப்பள்ளி கிராமத்தில் அரசு கால்நடை கிளைநிலையம் அமைத்திட கோருதல், கட்டளை மேட்டு வாய்க்கால் 26வது மதகில் செடிகொடி அண்டி முட்புதராக உள்ளதை சரிசெய்யக் கோருதல், கரூரில் உள்ள 6 பாசன வாய்க்கால்களுக்கு T 2000 TMC தண்ணீர் பெற்று வழங்கிட கோருதல், ஒருமுறை பயன்படுத்தக்கூடிய நெகிழியை தடை செய்யக் கோருதல், காவிரி ஆற்றில் மணல் அள்ளுவதை தடுத்தல், கட்டளை - மருதாண்டான் வாய்க்கால் மற்றும் புலியூரில் இருந்து பிரியும் வாய்க்கால் தூர்வாரக் கோருதல், சின்னமநாயக்கன்பட்டி முதல் நடராஜபுரம் வரை வரும் வாய்க்கால் தூர்வாரக் கோருதல், கட்டளை மேட்டு வாய்க்கால் மாயனூர் முதல் தாயனூர் வரை 62 கி.மீ நவீனப்படுத்தும் பணி நிலை கோருதல், காவிரி குடிநீர் கோருதல் உள்ளிட்ட பல்வேறு புதிய கோரிக்கை மனுக்கள் இன்று வரப்பெற்றது. 

மேலும் படிக்க | சிதைக்கப்பட்ட சின்னசேலம் தனியார் பள்ளியை சீரமைத்து வகுப்புகள் தொடங்குவது எப்போது?

 

 

இந்த கோரிக்கை மனுக்களை துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைத்து பதில்கள் பெறப்பட்டது, மேலும் இனி வரும் விவசாயிகள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் தெரிவிக்கப்படும் என ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் தெரிவித்தார். அத்துடன், 83 விவசாயிகள் கோரிக்கைகளாக எழுதி நேரடியாக மாவட்ட ஆட்சித் தலைவரிடம் வழங்கினார்கள்.

மேலும் படிக்க | திமுகவை கண்டித்த எடப்பாடி பழனிச்சாமி மேடையிலேயே மயங்கினார்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News