கன்னியாகுமரி மாவட்டம் மைலோடு அருகே தேவாலய பங்குதந்தை இல்லத்தில் வைத்து, நாம் தமிழர் நிர்வாகி அயன் பாக்ஸால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இதில் ஆலய பங்குதந்தை, திமுக பிரமுகர் உட்பட 4 பேர் தலைமறைவாகியுள்ளனர். சிசிடிவி காட்சிகள் பதிவான டிவிஆரை குற்றம்சாட்டப்பவர்கள் எடுத்து சென்ற நிலையில், கொலை செய்யப்பட்டவரின் உடலை எடுக்கவிடாமல் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் படிக்க | விஜய் செய்து காட்டினார்! ரஜினி, கமல் செய்தார்களா? விஜய் ஆதரவாக பேசும் அதிமுக!
மைலோடு அருகே மடத்சுவிளை பகுதியை சேர்தவர்சேவியர்குமார் (42). நாம் தமிழர் கட்சியின் தக்கலை ஒன்றிய தலைவராக பதவி வகித்து வரும் இவர் திங்கள்நகர் அரசு போக்குவரத்து பணிமனையில் மெக்கானிக்காகவும் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஜெமீலா மைலோடு பகுதியில் உள்ள புனித மிக்கோல் அதிதூதர் தேவாலயத்திற்கு சொந்தமான மதர் தெரஸா பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.
அவரை பள்ளி நிர்வாகம் திடீரென பணிநீக்கம் செய்தது. இதையடுத்து சேவியர்குமார் வாட்ஸ்அப் குழுக்களில் ஆலய பங்குதந்தை குறித்து அவதூறு பரிப்பியதாக தெரிகிறது. தொடர்ந்து இது குறித்து பேசுவதற்காக சேவியர் குமாரை தூய மிக்கேல் அதிதூதர் ஆலய வளாகத்திலுள்ள பங்குதந்தை இல்லத்திற்கு வருமாறு பங்கு தந்தை ராபின்சன் அழைத்துள்ளார்.
இதையடுத்து அங்கு வந்த சேவியர் குமாரிடம் பங்குதந்தை ராபின்சன் வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் பங்குதந்தை ராபின்சன் மற்றும் தக்கலை தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் ரமேஷ் பாபு, இவரது சகோதரர் சுரேஷ், ஜெஸ்டஸ் ரோக் உள்ளிட்டோர் ஐயன் பாக்ஸால் ராபின்சனை அடித்து கொலை செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அங்கு கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சியின் டிவீஆரு பதிவு பெட்டியையும் எடுத்து கொண்டு தப்பி ஓடினர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த அப்பகுதி மக்கள் ஆலயத்தில் குவிந்ததுடன் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினரை உடலை எடுக்க எடுக்க விடாமல் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருவதையடுத்து காவல்துறையினர் குவிக்கபட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க | ராமேஸ்வரத்தில் புனித நீராடிய பிரதமர் மோடி - புகைப்படங்கள் இதோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ