கோட்சே ஒரு தீவிரவாதி என கமல் கூறியது உண்மை: சிபிஐ (எம்) கே.பாலகிருஷ்ணன் ஆதரவு

"மகாத்மா காந்தியை கொடூரமாக கொலை செய்த நாதுராம் கோட்சே ஒரு தீவிரவாதி என்பது மறுக்க முடியாத உண்மையாகும்" என சிபிஐ (எம்) கட்சியின் தமிழ் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 16, 2019, 07:35 PM IST
கோட்சே ஒரு தீவிரவாதி என கமல் கூறியது உண்மை: சிபிஐ (எம்) கே.பாலகிருஷ்ணன் ஆதரவு title=

சென்னை: கடந்த 12 ஆம் அரவக்குறிச்சி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், "சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாத்ராம் கோட்சே. நான் காந்தியின் மானசீக கொள்ளுபேரன். அந்த கொலைக்கு கேள்வி கேட்க வந்திருக்கிறேன்" இது முஸ்லிம்கள் நிறைய இருக்கும் பகுதி என்பதால், இதனை சொல்லவில்லை. காந்திசிலைக்கு முன்னாள் சொன்னேன் எனக் கூறினார். 

இது பெரும் விவாததுக்கு உள்ளானது. பாஜக மற்றும் இந்து அமைப்பு தரப்பில் இருந்து கமலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் அவரின் மீது நாடு முழுவதும் பல வழக்குகள் போடப்பட்டது.

இதுக்குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் நாடு மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன், "மகாத்மா காந்தியை கொடூரமாக கொலை செய்த நாதுராம் கோட்சே ஒரு தீவிரவாதி என்பது மறுக்க முடியாத உண்மையாகும் எனக் கூறியுள்ளார்.

அதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-

தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனர் திரு.கமலஹாசன் அவர்கள் மகாத்மா காந்தியை படுகொலை செய்த நாதுராம் கோட்சேவை பற்றி பேசியவை தவறானவையல்ல. தேச விடுதலைப் போராட்டத்தின் தந்தையான மகாத்மா காந்தியை கொடூரமாக கொலை செய்த நாதுராம் கோட்சே ஒரு தீவிரவாதி என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

கமலஹாசன் பேசியதற்கு மாற்றுக்கருத்து உள்ளவர்கள் தங்களது கருத்தினை வெளியிட உரிமை உண்டு. ஆனால் கமலஹாசனை மிரட்டுவதும், அவர் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டங்களில் வன்முறையை உருவாக்குவதும், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவரது நாக்கை அறுக்க வேண்டுமென கூறுவதும், மன்னார்குடி ஜீயர் கமலஹாசனை நடமாட விட மாட்டோம் என தெரிவித்திருப்பதும் அரசியல் சட்டம் வழங்கியுள்ள கருத்து சுதந்திரத்திற்கு விரோதமானதாகும்.இத்தகைய போக்கினை அனுமதிக்கக்கூடாது.

இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

Trending News