ஜெயலலிதா உடல்நிலை- தமிழகத்திற்கு பேருந்து சேவை நிறுத்தம் செய்தது கர்நாடகா

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Last Updated : Dec 5, 2016, 12:43 PM IST
ஜெயலலிதா உடல்நிலை- தமிழகத்திற்கு பேருந்து சேவை நிறுத்தம் செய்தது கர்நாடகா  title=

சென்னை ( கர்நாடக): தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று சென்னையிலிருந்து கர்நாடக செல்லும் பேருந்துகள் தற்காலிகமாக கர்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் (கே.எஸ்.ஆர்.டி.சி.) நிறுத்தியுள்ளது.

பெங்களூருவில் இருந்து தமிழகம் வந்த கர்நாடக பேருந்து திருவண்ணாமலை அருகே கல் வீச்சு தாக்கப்பட்டதால் பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டன.

தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் போக்குவரத்து குறைந்து சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. தமிழகத்துக்கு இயக்கப்படும் கர்நாடகப் அரசுப் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. 

மேலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான தொண்டர்கள் அப்பல்லோ மருத்துவமனை வட்டாரத்தில் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்ப்படுத்தப்பட்டுள்ளனர். துணை ராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அதிரடிப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

அதிமுக தொண்டர்களும், அமைச்சர்களும் அப்பல்லோ மருத்துவமனையில் குவிந்து வருவதால் மருத்துவமனையை சுற்றி உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

Trending News