ஜல்லிக்கட்டு; வேடிக்கை பார்க்க சென்ற இளைஞர் மாடு முட்டி உயிரிழப்பு

அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்கச் சென்ற இளைஞர் ஒருவர் மாடு முட்டியதில் பரிதாபமாக உயிரிழந்தார். 

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 14, 2022, 05:56 PM IST
 ஜல்லிக்கட்டு; வேடிக்கை பார்க்க சென்ற இளைஞர் மாடு முட்டி உயிரிழப்பு title=

உலகப்புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப்போட்டி கொரோனா கட்டுப்பாடுகளுடன் இன்று நடைபெற்றது. காலை 8 மணிக்கே தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டியில் ஒரு சுற்றுக்கு 50 வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். 2000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

ALSO READ | Pongal Festival: எருதாட்டத்திற்கு தடை விதிப்பு..!

அனைத்து பார்வையாளர்களுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. முறையான சான்றிதழ்கள் வழங்கிய 150 பேர் ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் பார்க்க அனுமதிக்கப்பட்டனர். ஜல்லிக்கட்டு போட்டி மொத்தம் 7 சுற்றுகளாக நடைபெற்றது. இதில் சுமார் 300 மாடுபிடி வீரர்களும், 600க்கும் மேற்பட்ட காளைகளும் அவிழ்த்துவிடப்பட்டன. போட்டியின் முடிவில், மாடு முட்டியதில் மாடு பிடி வீரர்கள் 26 பேரும், பார்வையாளர்கள் 11 பேரும் காயமடைந்தனர். இதேபோல் மாட்டின் உரிமையாளர்கள் 22 பேரும் காயமடைந்தனர்.

இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். 18 வயதான குட்டீஸ் என்பவரின் மகன் பாலமுருகன் மாடுகள் வெளியே வரும் பகுதியில் நின்று ஜல்லிக்கட்டு போட்டியை பார்த்தாக கூறப்படுகிறது. அப்போது, மாடு ஒன்று எதிர்பாராதவிதமாக முட்டியதில் அவர் படுகாயமடைந்தார். உடனடியாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

ALSO READ | தைப்பொங்கல் 2022: புகழ் ஓங்க, மகிழ்ச்சி பொங்க, இன்பம் தங்க வந்தது பொங்கல்!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News