அரசியலுக்கு வாரிசுகள் வரக்கூடாது என்பது சட்டத்தில் இல்லை: OPS!

மக்களவை தேர்தல், சட்டப்பேரவை இடைத்தேர்தல் பரப்புரையை மதுரையில் இருந்து தொடங்கினார் துணை முதல்வர் ஓபிஎஸ்!  

Last Updated : Mar 20, 2019, 12:49 PM IST
அரசியலுக்கு வாரிசுகள் வரக்கூடாது என்பது சட்டத்தில் இல்லை: OPS! title=

மக்களவை தேர்தல், சட்டப்பேரவை இடைத்தேர்தல் பரப்புரையை மதுரையில் இருந்து தொடங்கினார் துணை முதல்வர் ஓபிஎஸ்!  

தமிழ்நாட்டில் வரும் 18.04.2019 அன்று நடைபெறவிருக்கும் நிலையில், தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், மக்களவை தேர்தலையும், தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலையும் சந்திக்க அதிமுக தயாராகி வருகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரி என அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் மொத்தம் 40 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதில் அதிமுக 20 இடங்களில் களம் காண்கிறது. இந்நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் தன்களின் துரத்தல் பிரச்சரத்தை துவங்கியுள்ளனர். இதை தொடர்ந்து, மக்களவை தேர்தல், சட்டப்பேரவை இடைத்தேர்தல் பரப்புரையை மதுரையில் இருந்து தொடங்கினார் துணை முதல்வர் ஓபிஎஸ். 

மதுரை வளையப்பட்டியில் மகன் ரவீந்திரநாத்தை ஆதரித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பிரச்சாரம் மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், " தகுதியான வேட்பாளர்களை மக்கள் ஏற்று கொண்டுள்ளதாகவும்,  அரசியலுக்கு வாரிசுகள் வரக்கூடாது என எந்த சட்டத்திலும் இல்லை எனவும் தெரிவித்தார்.

எனக்கே வாக்களிப்பதாக நினைத்து என் மகனுக்கு வாக்களிக்க வேண்டும், உங்களிடம் இவரை ஒப்படைக்கிறேன் நீங்கள்தான் இவரை வெற்றிபெற வைக்க வேண்டும் அவர் தெரிவித்துள்ளார். ராஜகண்ணப்பன் குறித்த கேள்விக்கு, அவர் ஒரு கட்சியில் இணைவதும், விலகுவதும் வாடிக்கைதான் எனவும், அதிமுகவில் எந்த உட்கட்சி பூசலும் இல்லை எனவும் குறிப்பிட்டார். 

 

Trending News