சிறுமியின் வயிற்றில் இருந்த இரும்பு துகள்கள் -ரூ.3லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவு

விபத்தில் சிக்கிய சிறுமியின் வயிற்றில் இருந்த, இரும்பு துகளை அகற்றாததால் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய்க்கு 3 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, தமிழக அரசுக்கு, மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Written by - Gowtham Natarajan | Last Updated : Apr 20, 2022, 09:15 AM IST
  • விபத்தில் சிக்கிய சிறுமியின் வயிற்றில் இருந்த இரும்பு துகள்கள்
  • முறையாக சிகிச்சை வழங்காததால் அவதிக்குள்ளான சிறுமி
  • சிறுமியின் தாய்க்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவு
சிறுமியின் வயிற்றில் இருந்த இரும்பு துகள்கள் -ரூ.3லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவு title=

சென்னை குரோம்பேட்டை ரெங்காநகரைச் சேர்ந்த சுதா, மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2018-ம் ஆண்டு கார் மோதியதில் காயமடைந்த தனது மகள் கவிநயா, எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டதாகவும், அறுவை சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிய நிலையில், மகளின் அடிவயிற்றில் கடுமையான வலி ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். பின் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து, 'எக்ஸ்ரே' எடுத்து பார்த்த போது மகளின் அடிவயிற்றில் சிறிய இரும்புத்துண்டுகள் சரியாக அகற்றப்படாமல் இருப்பது  இருப்பது தெரியவந்துள்ளது. 

human rights commission

பின், அறுவை சிகிச்சை மூலம் இரும்பு துண்டு அகற்றப்பட்டதாகவும், எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை டாக்டர்களின் கவனக்குறைவால் குழந்தை கடுமையான பாதிப்புக்கு உள்ளானதாகவும் கூறியவர், இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

தமிழக அரசு

மேலும் படிக்க | முதலமைச்சர் ஸ்டாலின் மீதான கிரிமினல் அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை

இந்த மனுவை விசாரித்த போது சிறுமிக்கு எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை மருத்துவர்கள் இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம் வகுத்துள்ள மருத்துவ நெறிமுறைகள்படி முறையாக சிகிச்சை வழங்காதது உறுதியானது. இதனையடுத்து சிறுமி கவிநயா கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக கூறி, மனுதாரருக்கு 3 லட்சம் ரூபாய்  இழப்பீடாக வழங்க தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க | கோடநாடு வழக்கு : 217 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டதாக தகவல்

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News