அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீடு உள்ளிட்ட இடங்களில் ரெய்டு

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் அவரது உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 16, 2021, 08:07 AM IST
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீடு உள்ளிட்ட இடங்களில் ரெய்டு title=

அதிமுக முன்னாள் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே.சி.வீரமணிக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.  

கே.சி.வீரமணி (KC Veeramani) அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்தாக புகார் வந்த நிலையில், சென்னை, திருப்பத்தூர், வேலூர் உள்ளிட்ட 28 மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெறுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த லஞ்ச ஒழிப்புத்துறையினரால் (Income Tax Raid) சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனை இன்று அதிகாலை 3 மணியில் இருந்து இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

ALSO READ | நியாயத்தின் பக்கம் நின்று எனக்கு நம்பிக்கையூட்டிய அண்ணன்கள் EPS, OPS-க்கு நன்றி: வேலுமணி

தற்போது ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், ஏலகிரி மலை உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. 8 அதிகாரிகள் தலைமையில் கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

 

 

ஜோலார்பேட்டை இடையம்பட்டியில் உள்ள வீரமணிக்கு சொந்தமான திருமண மண்டபம் அவரது வீடு ஆகியவற்றிலும் சோதனை நடைபெறுகிறது. அது போல் திருப்பத்தூரில் அவருக்கு சொந்தமான நட்சத்திர ஹோட்டலிலும் தீவிர சோதனை நடத்தப்படுகிறது. அதிமுக ஆட்சியில் வணிகவரித் துறை அமைச்சராக இருந்தவர் கே.சி. வீரமணி எனபது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் திமுக தேர்தல் அறிக்கையில் ஊழலில் திளைத்த அதிமுக அமைச்சர்கள் சிறை செல்வர் என வாக்குறுதி அளித்தப்பட்டது. திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக கந்தசாமி நியமிக்கப்பட்டு பலவேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். 

 

முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் ஏற்கனவே சோதனை நடந்தது. மேலும் இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | என்னை அதிமுகவில் இருந்து நீக்க வீரமணி திட்டம்- நிலோபர் கபில் புகார்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News