திரைப்பட பாணியில் புல்லட் திருட்டு; டெஸ்ட் டிரைவ் செய்த காதல் ஜோடிகள் மாயம்!

திரைப்படங்களில் இருசக்கர வாகனத்தை விலைபேசி அவற்றை ஓட்டிப் பார்த்து விட்டு வருவதாகக் செல்லும் வடிவேலு நடித்த திரைப்படத்தின் காட்சிகள் பெரும் நகைச்சுவையும் சிந்திக்க வைக்கும் வரையில் இருக்கும்.

Last Updated : Jan 23, 2022, 11:12 AM IST
 திரைப்பட பாணியில் புல்லட் திருட்டு; டெஸ்ட் டிரைவ் செய்த காதல் ஜோடிகள் மாயம்! title=

திரைப்படங்களில் இருசக்கர வாகனத்தை விலைபேசி அவற்றை ஓட்டிப் பார்த்து விட்டு வருவதாகக் செல்லும் வடிவேலு நடித்த திரைப்படத்தின் காட்சிகள் பெரும் நகைச்சுவையும் சிந்திக்க வைக்கும் வரையில் இருக்கும் .அந்த வகையில் சேலத்தில் பழைய பேருந்து நிலையம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட பழைய இருசக்கர வாகன ஏஜென்சிகள் செயல்பட்டு வருகின்றன 

இங்கு வகைவகையான வாகனங்கள் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ள இதனடிப்படையில் சேலம் ராஜ கணபதி ஏஜென்சி என்ற இரண்டாம் தர புல்லட் விற்பனை மையம் செயல்பட்டு வருகிறது இந்த மையத்திற்கு இன்று காலை வந்த இரண்டு காதல் ஜோடிகள் வாகனத்தை விலை பேசுவதற்காக பல்வேறு வாகனங்களை ஆய்வு செய்துள்ளனர்.

ALSO READ | வேலூர்; எருதுவிடும் விழாவில் சோகம் - எருது முட்டிய சிறுமி உயிரிழப்பு

அதில் ஒரு காதல் ஜோடி புல்லட் ஒன்றை ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கு விலை பேசி பணம் கட்ட தயாராக இருந்தனர். பணத்தை கட்டுவதற்க்கு முன்பு வாகனத்தை ஓட்டி பார்க்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்ததால் வாகன உரிமையாளர் வாகனத்தை அவரிடம் ஒப்படைத்துள்ளார். அப்போது வாகனத்தில் ஏறி அமர்ந்த காதல் ஜோடிகள் சட்டென பறந்து தலைமறைவானார்கள்.

ALSO READ | Leopard Hunt: 5 நாட்கள் தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்தது! சிக்கியது சிறுத்தை! 

நீண்டநேரம் ஆகியும் அவர்கள் திரும்பி வராததால் வாகன உரிமையாளர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து உடன் வந்த மற்றொரு காதல் ஜோடி இடம் விசாரணை மேற்கொண்டனர். ஆனால் அவர்கள் யார் என்று தங்களுக்கு தெரியாது என குறிப்பிட்டுள்ளனர். இதையடுத்து இருவரையும் சேலம் நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டபோது தலைமறைவான இருவரும் காதல் ஜோடி என்பதும் கிருஷ்ணகிரி மாவட்டம் குப்பம் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து வாகன உரிமையாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

நூதன முறையில் திரைப்பட பாணியில் உயர்ரக இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற காதல் ஜோடிகள் எங்கு உள்ளனர் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது குறித்த வைரல் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

வீடியோவை இங்கே காணலாம்:

ALSO READ | போலீசாரைக் கண்டித்து பாஜக பிரமுகர் தீக்குளிக்க முயற்சி!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News