மேற்கு வங்கம் டைமண்ட் ஹார்பர் பகுதியை சேர்ந்த 30 வயதான மாணவி ஒருவர் சென்னை ஐஐடியில் ஆராய்ச்சி படிப்பை கடந்த 2018ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். அப்போது அவருடன் படித்துவந்த கிங்ஷீக்தேவ் சர்மா என்பவர் காதலிப்பதாக கூறி மாணவியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அவருடன் சேர்ந்து அவரது நண்பர்கள் சுபதீப் பானர்ஜி, மலாய் கிருஷ்ண மகதோ, டாக்டர் ரவிந்திரன், எடமன பிரசாத், நாராயண் பத்ரா, சவுர்வ தத்தா, அய்யன் பட்டாச்சார்யா உள்ளிட்டவர்களும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | முதலமைச்சர் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு..பாஜக நிர்வாகி கைது
இது குறித்து மாணவி ஐஐடி பேராசிரியர்களிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், தேசிய மகளிர் ஆணையத்திலும் , கோட்டுர்புரம் காவல்நிலையத்திலும் மாணவி கடந்த மார்ச் மாதம் புகார் அளித்தார். மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு இந்த வழக்கு மாற்றப்பட்ட நிலையில், சர்மா உள்ளிட்ட 8 பேர் மீது மகளிர் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் இதுதொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.
இதைத்தொடர்ந்து மாதர் சங்கத்தின் வலியுறுத்தலின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் 8 பேரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது . சென்னை மயிலாப்பூர் காவல்துறையினர் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கிங்ஷீக்தேவ் சர்மாவை பிடிக்க, மேற்கு வங்கம் விரைந்த நிலையில் கொல்கத்தாவில் பதுங்கி இருந்த சர்மா நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். அவரிடம் டைமண்ட் ஹார்பர் காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். நேற்று போக்குவரத்து வாரன்ட் பெற்று சென்னைக்கு அழைத்து வர போலீசார் திட்டமிட்டனர்.
மேலும் படிக்க | மோஜ் பார்த்த தங்கை : அண்ணன் கண்டித்ததால் தற்கொலை..!
இந்நிலையில் ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட மேற்கு வங்கத்தை சேர்ந்த முன்னாள் மாணவர் கிங்ஷீக்தேவ் சர்மா ஏற்கனவே ஜாமீன் பெற்றதால் அவர் வெளிவந்தார். கைது செய்யப்பட்டு சென்னைக்கு அழைத்து வர தீவிர நடவடிக்கை எடுத்துவந்த சூழலில், கடைசி நேரத்தில் இந்த வழக்கில் முன்ஜாமீன் வாங்கியதற்கான உத்தரவை கிங்ஷீக்தேவ் சர்மா காண்பித்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR