மாணவர்களை அவமதித்தால்..! எச்சரிக்கும் வகையில் நடவடிக்கை

கட்டணம் செலுத்தாத மாணவர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோரை அவமதிக்கும் வகையில் செயல்படவில்லை என, தனியார் பள்ளிகள் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

Written by - Dayana Rosilin | Last Updated : Mar 24, 2022, 03:08 PM IST
  • கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு எதிரான நடவடிக்கை
  • மாணவர்கள், பெற்றோரை தரக்குறைவாக நடத்தவில்லை
  • பள்ளிகள் சான்றிதழ் அளிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு
மாணவர்களை அவமதித்தால்..!  எச்சரிக்கும் வகையில் நடவடிக்கை title=

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ஏராளமான மக்கள் வேலை, தொழில் உள்ளிட்ட அனைத்தையும் இழந்து நிற்கும் சூழல் கூட உருவானது. அதனை தொடர்ந்து கொரோனா தொற்றின் தாக்கம் சற்று குறைந்ததை அடுத்து தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளை திறக்க அரசு உத்தரவிட்டது. பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் நெரிமுறைகளுடன் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், தனியார் பள்ளி நிர்வாகத்தினர் மாணவர்களை கட்டணம் செலுத்த கூறி கட்டாயப்படுத்துவதாக புகார்கள் வெளியானது.

அது மட்டுமின்றி, கட்டணம் செலுத்த முடியாமல் அவதிப்படும் மாணவர்களை, பள்ளிக்குள் அனுமதிக்காமலும், அவர்களின் பெற்றோர்களை அவமதிக்கும் வகையிலும் சில பள்ளிகள் செயல்படுவதாக, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரகத்திற்கு புகார்கள் வந்தன.இதையடுத்து, இதுபோன்ற செயல்களில் தனியார் பள்ளிகள் ஈடுபடக்கூடாது எனவும், மீறும் பள்ளிகள் மீது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்கவும் மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் உத்தரவிட்டது.

இந்நிலையில், அனைத்து தனியார் பள்ளிகளும், மாணவர்களை வகுப்பறையை விட்டு வெளியேற்றவில்லை, அவர்களின் பெற்றோர்களை தரக்குறைவாக பேசவில்லை என, பள்ளி முதல்வர், செயலாளர், தாளாளர் ஆகியோர் கையெழுத்திட்டு, முதன்மைக் கல்வி அலுவலரிடம் கடிதத்தை ஒப்படைக்க,  உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கான சான்றிதழ் நகலையும், மயிலாடுதுறை உள்ளிட்ட சில மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், தனியார் பள்ளிகளுக்கு வழங்கியுள்ளனர். ‛‛2021-22 கல்வியாண்டில்   தங்களது பள்ளியில் படித்து வரும் மாணவர்களில், கல்வி கட்டணத்தை  செலுத்தாத மாணவர்களை வகுப்பறைக்குள் அனுமதிக்காமல் வெளியில் அனுப்புவது, அவர்களின் பெற்றோர்களை தரக்குறைவாக பேசுவது போன்ற நிகழ்வு ஏதும் பள்ளியில் நடைபெறவில்லை என சான்றளிக்கப்படுகிறது என, குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | அரசு அதிகாரிகளின் அராஜகம்; பழங்குடியின குழந்தைகள் கல்வியை பாதியில் கைவிடும் அவலம்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News