கோடநாடு கொள்ளை தொடர்பான வீடியோ விவகாரத்தில் டெல்லியில் கைதான சயான், மனோஜ் சென்னை அழைத்து வரப்பட்டனர்!
கோடநாடு கொலை - கொள்ளை விவகாரம் குறித்து புலனாய்வு செய்து வீடியோ வெளியிட்ட முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேலிடன், கோடநாடு கொள்ளை தொடர்பாக சயன், மனோஜ் வீடியோ வாக்குமூலம் அளித்துள்ளனர். இந்த வீடியோ தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோடநாடு சம்பவத்தின் பின்னணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக சயன் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ள தமிழக முதல்வர் பழனிசாமி, அரசியலில் தங்களை நேரடியாக எதிர்கொள்ள முடியாமல் எதிர்கட்சிகள் தவறான தகவலை பரப்புவதாகவும், அதன் பின்புலத்தில் இருப்பவர்கள் விரைவில் கண்டறிந்து தண்டிக்கப்படுவர் எனவும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகி, இந்த வீடியோவை வெளியிட்ட மேத்யூ சாமுவேல் உட்பட வீடியோவில் பேசிய அனைவர் மீதும் சென்னை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளார். இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக மேத்யூ சாமுவேலிடம் விசாரணை நடத்துவதற்காக காவல்துறையினர் டெல்லி விரைந்தனர். பின்னர் டெல்லியில் சயான், மனோஜ் ஆகியோரை சென்னையில் இருந்து சென்ற தனிப்படை காவல் துறையினர் கைது செய்யப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து டெல்லியில் கைது செய்த சயான், மனோஜ் ஆகியோரை சென்னை தனிப்படை காவல்துறை விமானம் மூலம் இன்று சென்னை அழைத்து வந்துள்ளது. மேலும் வீடியோ வெளியிட்ட தெகல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேலை காவல்துறையினர் வலைவீசி தேடி வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இதுகிறத்து மேத்யூஸ் சாமுவேல் இதுகுறித்து தெரிவிக்கையில்., தான் காவல்துறையின் விசாரணையை சந்திக்க தயாராக இருப்பதாகவும், இந்த உண்மை குற்றவாளி பழனிசாமி தான் என்பதை நிரூபிக்க தன்னிடம் ஆதாரம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.