முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதி காலியானதையடுத்து. வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக புகார் எழுந்த புகாரின் பேரில் தேர்தல் கமிஷன் தேர்தலை நிறுத்தியது.
இப்போது மீண்டும் டிசம்பர் 21ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் அதிமுக சார்பில் மதுசூதனனும், சசிகலா அணி சார்பில் டிடிவி தினகரனும், திமுக சார்பில் மருது கணேஷ், பாஜக சார்பில் கரு.நாகராஜன் போட்டியிடுகின்றனர். மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் திமுகவிற்கு ஆதரவளிப்பதாக ஏற்கனவே அறிவித்துவிட்டன.
இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கத் தலைவரான விஷால் போட்டியிடப் போவதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்ததையடுத்து, இன்று காலை விஷால் போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு ஒரு சுதந்திர வேட்பாளராக வேட்பு மனுவை தாக்கல் செய்ததார்.
இதையடுத்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், தனக்கு விசில் சின்னம் ஒதுக்க வேண்டும் என்று நடிகர் விஷால் அனுமதி கேட்டுள்ளார்.
அதை தொடர்ந்து தற்போது வேட்பு மனு முடிந்து வெளியே வந்த அவர் பத்திரிகையாளர் சந்திப்பில் இது தொடர்பாக கூறுகையில்;- மக்கள் பிரதிநிதிகளாக இருக்க விரும்புகிறேன், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் மற்றும் அனைத்து கோரிக்கைகள் மற்றும் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டும். என்பதே தன்னுடைய குறிக்கோளாகும் என்று தெரிவித்துக் கொண்டார்.
I want to be the representative of the people, want to do good for the people and fulfill all their requests and wishes: Actor Vishal, who has filed nomination as an independent candidate for #RKNagarByPoll #Chennai pic.twitter.com/YttoqkL6G3
— ANI (@ANI) December 4, 2017