கட்சியில் இருந்து நேற்றே ஒதுங்கிவிட்டேன்- தினகரன்

Last Updated : Apr 19, 2017, 12:36 PM IST
கட்சியில் இருந்து நேற்றே ஒதுங்கிவிட்டேன்- தினகரன் title=

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக சசிகலா தலைமையில் ஒரு அணியாகவும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியாகவும் பிளவு பட்டது. இதனால் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அதிமுக சின்னம் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தேர்தல் கமிஷன் முடக்கிவைத்து இருக்கும் இரட்டை இலை சின்னத்தை தக்கவைத்துக்கொள்வதற்காக அதிமுக-வின் இரு அணிகளையும் சேர்ப்பதற்கான முயற்சி நடைபெறுகிறது.

அதிமுக அணிகள் ஒன்றாக செயல்பட வேண்டும் என்று ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வமும் கருத்து தெரிவித்து இருந்தார். அவர் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும் செய்தி வெளியானதால், விரைவில் இரு அணிகளும் ஒன்றாக இணைவது தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்க வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன்:-

அதிமுக-விலிருந்து ஒதுக்கியதால் நான் வருத்தப்படுவில்லை. மேலும் நான் நேற்றே கட்சியிலிருந்து ஒதுங்கிவிட்டேன். 

அமைச்சர்கள் தற்போது நடத்திய கூட்டத்தில் என்னையும் அழைத்திருந்தால் சென்றிருப்பேன். கட்சியும் ஆட்சியும் பிளவுபட தான் ஒருபோதும் காரணமாக இருக்கமாட்டேன் என்று கூறினார்.

கட்சியில் சிலருக்க ஏற்பட்ட அச்சத்தால் மட்டுமே தற்போதைய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அவசரகதியில் அமைச்சர்கள் தங்கள் முடிவை அறிவித்துள்ளனர். நான் ராஜினாமா செய்ய மாட்டேன். பொதுச் செயலாளர் என்னை நீக்கட்டும். ஏதோ ஒரு பயத்தில் அமைச்சர்கள் திடீர் முடிவெடுத்துள்ளனர். அதிமுகவில் இருந்து விலக்கி வைத்ததில் வருத்தம் இல்லை. ஆட்சி, கட்சி பலவீனமாக நான் காரணமாக இருக்கமாட்டேன். இவ்வாறு கூறியுள்ளார்.

Trending News