TN Pongal Gift Package 2024 Last Date: வருடாவருடம் பொங்கல் பண்டிகையை (Pongal 2024) முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் ரேசன் கடைகளில் சிறப்பு தொகுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தாண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேசன் கடைகளில் பொங்கல் சிறப்பு தொகுப்புடன் ரொக்கத் தொகையும் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாத தொடக்கத்தில் அறிவிப்பை வெளியிட்டார்.
உரிமைத் தொகையும், பொங்கல் பரிசும்...
அந்த வகையில் சுமார் 2 கோடியே 19 லட்சத்து 71 ஆயிரத்து 113 அரிசி அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் ரொக்கமாக (Pongal Gift Package 2024) வழங்கப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழுக்கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. குறிப்பாக, ரொக்கத் தொகை 1000 ரூபாயுடன் கூடிய இந்த பரிசுத் தொகுப்புக்காக ஒதுக்கப்பட்ட தொகை 2,436.19 கோடி ரூபாய் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதுமட்டுமின்றி, சுமார் 1 கோடியே 77 லட்சம் சேலைகளும் வேட்டிகளும் ஏழை - எளிய மக்களுக்கு பொங்கல் பரிசாக ரேசன் கடைகள் மூலம் இந்த ஆண்டுதான் பொங்கலுக்கு முன்பே வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், தமிழ்நாடு அரசு சார்பில் மாதாமாதம் குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. வழக்கமாக ஜன. 15ஆம் தேதி பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும். ஆனால், இம்முறை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன. 10ஆம் தேதியே சுமார் 1 கோடியே 15 லட்சம் பயனாளர்களின் வங்கிக் கணக்கில் உரிமைத் தொகை செலுத்தப்பட்டது.
மேலும் படிக்க | 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குப் பயணம்
Pongal Gift 2024: இன்றே கடைசி நாள்
இந்நிலையில், பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கம் 1000 ரூபாயையும் பெற முதலில் டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, கடந்த ஜன. 10ஆம் தேதி பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கும் நிகழ்ச்சியை முதலமைச்சர் ஸ்டாலின் (CM MK Stalin) தொடங்கிவைத்தார், அன்றே தமிழ்நாடு முழுவதும் டோக்கன்கள் மூலம் பரிசுத் தொகுப்புடன் ரொக்கத் தொகையும் விநியோகம் செய்யப்பட்டது.
ஜன. 10, 11 ஆகிய தேதிகளில் டோக்கனை பெற்றவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிலையில், ஜன. 12ஆம் தேதி முதல் டோக்கன் பெறாத ரேசன் அட்டைத்தாரர்களுக்கும் விநியோகம் செய்யப்பட்டது. பொங்கல் பண்டிகை வரை இந்த பரிசு தொகுப்பு வழங்கப்படும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், டோக்கன் பெறாத ரேசன் அட்டைதாரர்கள் பொங்கல் பரிசு தொகுப்பை பெற இன்றே கடைசி நாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரேசன் கடை ஊழியர்களுக்கு பொங்கல் பண்டிகை விடுமுறை உள்ளதால் இன்றுடன் பரிசு தொகுப்பு வழங்கும் பணிகள் நிறைவடைகிறது.
Pongal 2024 Gift: பொங்கலுக்கு பின்னும் கிடைக்குமா?
இருப்பினும், பொங்கல் பரிசு தொகுப்பை பெறாமல் விடுபட்டவர்களுக்கு பண்டிகை விடுமுறைக்கு பின் விநியோகம் செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 90 சதவீதம் வரை ரேசன் அட்டைதாரர்கள் பொங்கல் தொகுப்பை பெற்றுவிட்டதாக கூறப்படுகிறது. மேலும், ரேசன் கடைகிள்ல ரொக்கத் தோகையும், பொங்கல் தொகுப்பும் மீதம் இருக்கும்பட்சத்தில், அவை இன்று மாலை சரக அலுவலகங்களில் ஒப்படைக்க ரேசன் கடை ஊழியர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருப்பதாகவும் தெரிகிறது.
மேலும் படிக்க | போகி கொண்டாட்டம்: சென்னையில் மோசமான காற்றின் தரம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ