தமிழ்நாட்டின் பப்பு உதயநிதி... அண்ணாமலை அடுத்தடுத்து அட்டாக்!

Annamalai About Udhayanidhi Stalin: தமிழகத்தின் மாண்பு சந்தி சிரிக்கிறது எனவும் உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தின் பப்புவாக உள்ளார் எனவும் தூத்துக்குடி விமான நிலையத்தில் அண்ணாமலை பேசியுள்ளார். 

Written by - Sudharsan G | Last Updated : Sep 4, 2023, 02:34 PM IST
  • கும்மிடிப்பூண்டியை தாண்டி திமுகவால் எதுவும் செய்ய முடியாது - அண்ணாமலை
  • ஒரே ஒரு வழக்கிற்கு பிறகு சீமான் திமுகவின் பி-டீமாக மாறிவிட்டார் - அண்ணாமலை
  • உதயநிதி பேசுவதை காங்கிரஸ் கட்சியினரே எதிர்க்கிறார்கள் - அண்ணாமலை
தமிழ்நாட்டின் பப்பு உதயநிதி... அண்ணாமலை அடுத்தடுத்து அட்டாக்! title=

Annamalai About Udhayanidhi Stalin: பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தனது இரண்டாம் கட்ட பாதயாத்திரையை இன்று தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டப்பேரவை தொகுதியில் இருந்து தொடங்க உள்ளார். முன்னதாக பாளையங்கோட்டையில் கொலை செய்யப்பட்ட பாஜக பிரமுகர் உடலுக்கு மாலை வைத்து மரியாதை செலுத்த உள்ளார்.

இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்த அண்ணாமலை செய்தியாளர்களை தூத்துக்குடி விமான நிலையித்தில் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,"தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுகிறது. பாளையங்கோட்டையில் நடைபெற்ற கொலை சம்பவத்திற்கு நேரடியாக திமுக நிர்வாகியே காரணம். நான்கு நாட்களுக்குப் பிறகு அவர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

குடிகார நாடாக மாற்றுகிறது

பல்லடம் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகி மோகன்ராஜ் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரோடு அவருடைய உறவினர்கள் உள்ளிட்ட நான்கு பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மது போதையில் இருந்த நபர் அவர்களை கொலை செய்துள்ளார். திமுக தமிழகத்தை குடிகார நாடாக மாற்றியதன் காரணமாக இந்த படுகொலை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

தென் தமிழகத்தில் அரிவாள் கலாச்சாரமே மேலோங்கி நிற்கிறது. தமிழகத்தின் பிரச்சினைகள் குறித்து பேசாமல் இந்தியா கூட்டணி குறித்து பேச முதலமைச்சர் ஸ்டாலின் புறப்பட்டுள்ளார். அவருக்கு தமிழகத்தின் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். இந்தியா குறித்து அவர் பேச வேண்டாம், கும்மிடிப்பூண்டியை தாண்டி திமுகவால் எதுவும் செய்ய முடியாது.

மேலும் படிக்க | 'டெங்கு, மலேரியா போன்றது சனாதனம்...' உதயநிதி பேச்சுக்கு பாஜக கடும் எதிர்ப்பு - பதிலடி என்ன?

தமிழகத்தின் பப்பு

தென்னிந்தியாவின் பப்புவாக உதயநிதி உள்ளார். மோடி சமூகம் குறித்து ராகுல் காந்தி பேசியது போல் சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். இவ்வாறு தொடர்ந்து பேசினால் இந்தியா கூட்டணியின் வாக்கு வங்கி தொடர்ந்து சரியும். தற்போது ஐந்து சதவீதம் வரை இந்தியா கூட்டணியின் வாக்கு சதவீதம் குறைந்துள்ளது. தொடர்ந்து இதுபோல உதயநிதி பேசினால், இந்தியா கூட்டணியின் வாக்குகள் 20 சதவீதம் வரை குறையும். ஒரு கருத்தை பேசிவிட்டு எதிர்ப்பு வந்த உடன் தொடர்ந்து அதற்கு விளக்கம் அளித்து வருகிறார். உதயநிதி பேசுவதை காங்கிரஸ் கட்சியினரே எதிர்க்கிறார்கள். 

வரும் தேர்தலில் இந்தியா கூட்டணி மண்ணை கவ்வ போவது உறுதி. இந்தியா டுடே கருத்துக் கணிப்பில் கூட தேசிய ஜனநாயக கூட்டணி 317 இடங்களில் வெற்றிபெறும் என கூறப்பட்டுள்ளது. மோடி இன்னும் பிரச்சாரத்திற்கு வரவில்லை. அவர் பிரச்சாரத்திற்கு வந்தால் 400 இடங்களில் வெற்றி பெறுவது உறுதியாகும்.
ஆறு முறை ஆட்சியில் இருந்த பிறகும் சமூக நீதி குறித்து பேசி வருகிறார்கள். இவர்களால் சமூக நீதியை கொண்டு வர முடியவில்லையா" என கேள்வி எழுப்பினார்.

சீமான் 2.0

தொடர்ந்து, அவர் திமுக குறித்து வட இந்தியாவில் நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்களில் கூட பேசப்படுகிறது எனவும், இது திமுகவின் வளர்ச்சியை காட்டவில்லையா என்ற கேள்விக்கு, "தமிழகத்தின் மாண்பு சந்தி சிரிக்கிறது. அவர்கள் நடவடிக்கைகளால் தமிழகத்தின் மாண்பு குறைந்து விடும். ஒரே ஒரு வழக்கிற்கு பிறகு சீமான் திமுகவின் பி-டீமாக  மாறிவிட்டார். திமுகவை பங்காளி எனக் கூறுகிறார். தற்போது சீமான் 2.0 ஆக இருக்கிறார். தமிழகத்தின் தைரியமான அரசியல்வாதிகளில் ஒருவரான சீமான் ஒரே வழக்கிற்கு பயந்து திமுகவை பங்காளி என கூறுவது வருத்தமாக உள்ளது.

தென் தமிழகத்தில் வளர்ச்சி இல்லாததே தொடர் கொலைகள் மற்றும் அடிதடி சம்பவங்களுக்கு காரணமாக அமைகிறது, ஜாதிய வன்முறைகளும் ஏற்படுகிறது. திமுக அரசுக்கு தென் தமிழகத்தின் மீது அக்கறை இல்லை. புதிய பார்வை கொண்ட கட்சியாக பாரதிய ஜனதா கட்சி வழங்குகிறது. பாரதிய ஜனதா கட்சியால் மட்டுமே தென் தமிழகத்தில் வளர்ச்சியை கொண்டுவர முடியும்.

நிலையான ஆட்சி வேண்டும்

சமீபத்தில் கையெழுத்து இடப்பட்ட யுபிஐ அக்ரிமெண்ட் வேலைவாய்ப்பில் தென் தமிழகத்திற்கு 75 சதவீதம் வழங்க வேண்டும் என அதன் உயர் அதிகாரிக்கு வேண்டுகோள் விடுத்து இருக்கிறேன். இந்தியாவில் வளர்ச்சி குறைந்த பகுதிகளாக தென் தமிழகம் உள்ளது.

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் 2004ஆம் ஆண்டு போன்ற சூழல் தான் ஏற்படும். அவர்கள் வைத்திருக்கும் எம்பிக்களுக்கு ஏற்ப மந்திரி சபையை கூறு போடும் நிலை ஏற்படும். யார் பிரதமர் என்று அறிவிக்காமல் கடைசி நேரத்தில் மன்மோகன் சிங்கை பிரதமர் ஆக்கினார்கள். அந்த ஐந்து ஆண்டுகளில் 2ஜி உள்ளிட்ட பல்வேறு ஊழல்கள் நடைபெற்றது. அதே போன்ற நிலை இந்தியாவிற்கு ஏற்பட வேண்டாம். நிலையான ஆட்சி அமைய வேண்டும்" என்று அண்ணாமலை கூறினார். 

மேலும் படிக்க | "இதுதான் திராவிட மாடல்.. வழக்கு போடுங்க பாத்துக்குறோம்" - உதயநிதி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News