சர்வீஸிற்கு வந்த காருக்குள் பதுங்கியிருந்த மலைப்பாம்பு!

வள்ளியூரில் உள்ள ஒரு கார் நிறுவனத்தில் இருந்த காருக்கு ஒரு மலைப்பாம்பு பதிங்கியிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   

Written by - Yuvashree | Last Updated : Feb 13, 2024, 08:43 PM IST
  • வள்ளியூர் கார் ஷோரூமில் பரபரப்பு
  • காருக்குள் பதுங்கியிருந்த மலைப்பாம்பு
  • பின்னர் என்ன நடந்தது?
சர்வீஸிற்கு வந்த காருக்குள் பதுங்கியிருந்த மலைப்பாம்பு! title=

திருநெல்வேலி, வள்ளியூர் டாடா கார் கம்பெனியில்  கார் சர்வீஸ்க்கு விட வந்த நிலையில் பதுங்கி இருந்த மலை பாம்பை பார்த்த ஊழியர்கள் அலறி அடித்துக்கொண்டு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

நெல்லை மாவட்டம், வள்ளியூர் தெற்கு பகுதிநான்கு வழி சாலையில் அமைந்துள்ள டாடா கார் ஷோருமிற்கு இராதாபுரத்தைச் சேர்ந்த பழனி என்பவர் நேற்று மாலை சர்விஸ்க்கு  டாடா கம்பெனிக்கு காரினை விட்டுள்ளார்.

மேலும் படிக்க | கிளாம்பாக்கம் பிரச்னை: சூடான சேகர்பாபு... குறுக்கிட்ட இபிஎஸ்... விவாதத்தை முடித்த ஸ்டாலின்!

இன்று வழக்கம் போல ஷோரூம் ஊழியர்கள் சர்வீஸ்க்காக கார் முன்பகுதியை  திறந்தபோது மிகப்பெரிய மலைப் பாம்பு இருந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். பின்பு வள்ளியூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் 8 அடிநீளம்கொண்ட மலைப் பாம்பை மீட்டு வனப்பகுதியில் விடுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

நான்கு வழி சாலை மற்றும் குடியிருப்பு பகுதி அதிகம் நிறைந்த இடம் என்பதால் மலைப்பாம்பு எங்கிருந்து வந்தது என்ற கோணத்தில் வனத்துறையினர் விசாரணை செய்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பாபநாசம் பகுதிக்கு காரின் உரிமையாளர் பழனிஅந்த கார் சென்றிருந்ததாகவும் அதனால் மலைபாம்பு அங்கிருந்து வந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க | சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் எப்போது நடைபெறும்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News