Crime In Tamil Nadu: ஆவடியை அடுத்த அயப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பச்சைக்கிளி என்கின்ற சரண். இவர் மேல் பல்வேறு வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. இவர் வழக்கு ஒன்றுக்காக கடந்த 12ஆம் தேதி பூவிருந்தவல்லி நீதிமன்றத்தில் ஆஜராகி பின் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அயப்பாக்கம் எம்ஜிஆர் நகர் பகுதியில் சரணை வழிமறித்த மர்ம கும்பல் அவரை ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்து தப்பியது.
4 பேர் சரண்
ஆள் நடமாட்டம் மிகுந்த பிரதான சாலையில் அரங்கேறிய கொலை சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே சம்பவ இடத்தில் சுமார் 6 காவல் நிலையத்தை சேர்ந்த காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிந்தனர்.
மேலும் கொலை சம்பவம் குறித்து ஆவடி மாநகர இணை ஆணையர் விஜயகுமார் மற்றும் துணை ஆணையர் பாஸ்கரன் உள்ளிட்டோர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து விசாரித்தனர். குற்றவாளிகளை பிடிக்க நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதனிடையே சரண் என்கிற பச்சைக்கிளியை கொலை செய்ததாக ஒப்புகொண்டு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் திருவேற்காடு பகுதியை சேர்ந்த புருஷோத்தமன், குமரேசன், காட்டு மன்னார்கோயிலைச் சேர்ந்த பிரவின் மற்றும் தஞ்சாவூரை சேர்ந்த விவேக் ஆகிய நான்கு பேர் சரணடைந்துள்ளனர்.
மேலும் படிக்க | மகன் கண்முன்னே எரித்துக்கொல்லப்பட்ட கர்ப்பிணி! கணவன் வெறிச்செயல்! என்ன நடந்தது?
கொலையின் பின்னணி என்ன?
காவல்துறையினர் தீவிரமாக தேடுவதை தெரிந்து கொண்ட இவர்கள் சரணடைந்ததை அடுத்து புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையே இவர்களை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க திருமுல்லைவாயில் போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
முதல் கட்ட விசாரணையில் கடந்த 2019 ஆம் ஆண்டு சென்னை ஜே ஜே நகர் பகுதியில் அழகுராஜ் என்பவர் கொல்லப்பட்டார். இந்த கொலையில் தற்போது கொலை செய்யப்பட்ட சரண் என்கிற பச்சைக்கிளி குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். அந்த வழக்கு விசாரணைக்கு தான் அவர் இரு தினங்களுக்கு முன்பு நீதிமன்றம் சென்று திரும்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அழகுராஜ் கொல்லப்படும் போது அவருடன் இருந்த புருஷோத்தமன் என்பவர் வெட்டு காயத்துடன் உயிர் தப்பினார், மேலும் இந்த கொலை வழக்குக்கு சாட்சியாக அவர் தான் உள்ளார். இந்நிலையில், சரண் புருஷோத்தமனை தனக்கு எதிராக சாட்சி சொல்லக்கூடாது என மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனிடையே புருஷோத்தமன் தான் சரணை கொலை செய்ய சதி திட்டம் தீட்டி இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். போலீஸ் கஸ்டடியில் சரணடைந்தவர்கள் வந்த பின்னரே கொலைக்கான பின்னணி முழுமையாக தெரியவரும்.
மேலும் படிக்க | அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.1000 வழங்கக்கோரி பாஜக போராட்டம்-அண்ணாமலை அறிவிப்பு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ