வட சென்னைக்கு பெரிய பாதிப்பு... அமோனியா வாயு கசிவால் கடலில் நடந்த மாற்றம் - முழு பின்னணி!

North Chennai Ammonia Gas Leak: வட சென்னை எண்ணூர் பகுதியில் அமோனியா வாயு கசிவால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்தவர் விளக்கம் அளித்துள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : Dec 28, 2023, 05:43 PM IST
  • எண்ணூர் கோரமண்டலம் தொழிற்சாலையில் நேற்று முன்தினம் இந்த சம்பவம் நடந்தது.
  • 20 நிமிடங்களில் இந்த வாயு கசிவு நிறுத்தப்பட்டதாக தகவல்.
  • நூற்றுக்கணக்கான மீன்கள் கடலில் செத்துமிதக்கின்றன.
வட சென்னைக்கு பெரிய பாதிப்பு... அமோனியா வாயு கசிவால் கடலில் நடந்த மாற்றம் - முழு பின்னணி! title=

North Chennai Ammonia Gas Leak Updates In Tamil: சுற்றுச்சுழல் பாதுகாப்பு தொடர்ந்து குரல் கொடுத்து வரும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த பிரபாகரன் வீரஅரசு, எண்ணூர் அமோனிய வாயு கசிவினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அதிர்ச்சி தரும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மீன்களுக்கு என்ன பாதிப்பு?

அதில்,"எண்ணூரில் நேற்று முதல் அதிக அளவில் மீன்கள் செத்து கரை ஒதுங்கிக்கொண்டிருகின்றன. இது கோரமண்டல் தொழிற்சாலையில் இருந்து கடலில் கசிந்த அமோனியாவால் ஏற்பட்டுள்ளது. அமோனியா நீரில் கலந்த உடன் அது அமோன்னியம் ஹைட்ராக்ஸ்சைடு கரைச்சலாக மாறிவிடும். இதனால் கடல்வாழ் உயிரினங்களுக்கு பேராபத்து என்று விபத்து நடந்தது முதல் சொல்லி வருகிறோம். அதன் பாதிப்பினை தான் இப்போது காண்கிறோம்.

இந்த அம்மோனியம் ஹைட்ராக்ஸ்சைடு குறுகிய காலத்தில் மீன்களின் கண்கள், செவுள்கள் மற்றும் தோலை சேதப்படுத்தும். மீன்களின் செவுல் தசைகளுக்கு ஏற்படும் காயம், ஹைப்பர் பிளாசியாவை ஏற்படுத்தும். இதனால் மீனின் சுவாசிக்கும் திறன் குறைந்து இறந்துவிடும். மீன்களால் போதுமான அளவு அம்மோனியா ஹைட்ராக்சைடை கழிவுப்பொருளாக வெளியேற்ற முடியாமல், உள் உறுப்பு சேதமடைந்தும் இறந்துவிடும்.   நீண்ட நாட்கள் பாதிப்பாக மீன்களின் உடலின் இது pH-ஐ அதிகரிக்கும், தப்பி பிழைக்கும் மீன்களின் தசை வளர்ச்சியை பாதிக்கிறது.

மேலும் படிக்க | விஜயகாந்த் அரசியல் வாழ்வின் திருப்பம்... மண்டபம் இடிப்பு - தேமுதிக அலுவலகம் உருவான கதை!

ஈடு செய்ய முடியாத பாதிப்பு 

நன்னீரில் 0.02 mg/L அளவிற்கு அதாவது 37 லட்சம் லிட்டர் நன்னீரில் அரை கப் அம்மோனியம் ஹைட்ராக்ஸ்சைடு கலந்தாளே போதும், அது நீரில் உள்ள சில வகை மீன்களை கொன்றுவிடும் என்கிறார்கள். ஆனால் எண்ணூரில் பல ஆயிரம் டன் அம்மோனியா கொட்டப்பட்டுள்ளது. Indian Marine Discharge Standards-இன்படி கடலில் 5mg/L வரை அம்மோனியா கடலில் கொட்ட அனுமதிக்கப்படுகிறது, ஆனால் எண்ணூரில் நேற்று தமிழ்நாடு மாசுக்கட்டுபாட்டு துறை நடத்திய ஆய்வில் 49 mg/L அளவிற்கு அம்மோனியா கடலில் இருப்பது தெரியவந்துள்ளது. அம்மோனியா கசிவால் வட சென்னை கடல் பகுதிகளுக்கு ஈடு செய்ய முடியாத மிக பெரிய சூழலியல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது" என குறிப்பிட்டுள்ளார். 

குழு அமைப்பு

எண்ணூரில் நடந்த இந்த வாயு கசிவை ஆய்வு செய்து தமிழ்நாடு அரசுக்கு அறிக்கை சமர்பிக்க பல உறுப்பினர்கள் அடங்கிய தொழில்நுட்பக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு அதன் உடனடி மதிப்பீட்டு அறிக்கையை 24 மணி நேரத்திற்குள்‌ அரசுக்கு சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்ட நிலையில், அதன் விரிவான அறிக்கையை மூன்று நாட்களுக்குள்‌ சமர்ப்பிக்குமாறும்‌ உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை எண்ணூர் கோரமண்டல் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு காரணமாக 50க்கும் மேற்பட்டோர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். நேற்று முன்தினம் இரவு வாயு கசிந்த நிலையில், நேற்று அந்த தொழிற்சாலையை தற்காலிகமாக மூட தமிழ்நாடு அரசும் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க | விஜயகாந்த் எப்போது மனம் உடைந்து போனார்? அவரது மகனே சொன்ன தகவல்
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News