Corona Testing: கொல்கத்தாவை கள்ளக்குறிச்சியாக மாற்றினால் கொரோனா ஏமாந்துவிடுமா?

கொல்கத்தாவை கள்ளக்குறிச்சியாக மாற்றிக் காட்டினால் கொரோனா ஏமாந்துவிடுமா என்ன? உண்மையில் இந்த இவகாரம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : May 22, 2021, 01:19 PM IST
  • கொல்கத்தாவை கள்ளக்குறிச்சியாக மாற்றினால் கொரோனா ஏமாந்துவிடுமா?
  • தவறான தகவல்களை ஆய்வகம் பதிவேற்றியதால் சிக்கல்
  • ஆய்வகத்திற்கு பரிசோதனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது
Corona Testing: கொல்கத்தாவை கள்ளக்குறிச்சியாக மாற்றினால் கொரோனா ஏமாந்துவிடுமா? title=

சென்னை: கொல்கத்தாவை கள்ளக்குறிச்சியாக மாற்றிக் காட்டினால் கொரோனா ஏமாந்துவிடுமா என்ன? உண்மையில் இந்த இவகாரம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா நோய்த்தொற்று மிகவும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தி வரும் நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இந்த கொலைகார வைரஸ் இருக்கிறதா இல்லையா என்பதை தெரிந்துக் கொள்ள அய்வகங்களைத் (Laboratories) தான் மக்கள் நாட வேண்டியிருக்கிறது.

கொரோனாவின் தாக்கம் மிகவும் அதிகமாக இருப்பதால், அரசு, இதற்கான பரிசோதனைகளை மேற்கொள்ள தனியார் ஆய்வகங்களுக்கும் அனுமதி கொடுத்துள்ளது.

Also Read | சற்றே வேகம் தணியும் கொரோனா; கடந்த 24 மணி நேரத்தில் 2,57,299 பேருக்கு கொரோனா

இப்படி அரசின் அனுமதி பெற்று கொரோனா பரிசோதனை செய்யும் ஆய்வகங்கள் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் ஒரு ஆய்வகம், தவறான தகவல்களை பதிவேற்றியதால் பல சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது Medell Laboratory என்ற ஆய்வகம்.

கொரோனா தொற்றை உறுதி செய்யும் ஆர்.டி.பி.சி.ஆர் (RTPCR) சோதனைகளை செய்ய மெடெல் ஆய்வகத்திற்கு (Medell Laboratory) தற்போது பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் (Directorate of Public Health) தடை விதித்துள்ளது.

வெளிமாநிலங்களில் இருந்து பெறப்பட்ட கொரோனா பாசிடிவ் முடிவுகளை தமிழகத்தின் கணக்கில் இணைத்து காட்டிவிட்டது Medell Laboratory.

Also Read | மாநிலங்களிடம் 1.6 கோடிக்கு மேற்பட்ட COVID தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன: மத்திய அரசு

அலட்சிய மனப்பான்மையுடன் செயல்பட்ட இந்த ஆய்வகம், கொரோனாவுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகளில் எதிர்மறையான விளைவுகளை   இயக்குநரகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தாவில் இருந்து பெறப்பட்ட நேர்மறை முடிவுகளை கள்ளக்குறிச்சியில் இருந்து பெறப்பட்ட முடிவுகளாக இந்த ஆய்வகம் பதிவேற்றிவிட்டது. மே 19 மற்றும் 20 தேதிகளில் கூடுதலாக 4000க்கும் மேற்பட்ட கொரோனா நெகடிவ் முடிவுகளை பாஸிட்டாவாக பதிவு செய்து ஐ.சி.எம்.ஆரின் (ICMR) அதிகாரப்பூர்வ இணையத்தில் பதிவேற்றியுள்ளது மெட்வெல் ஆய்வகம்.

இந்தத் தகவலை தெரிவித்த பொதுசுகாதாரத்துறை இயக்குநர் மருத்துவர் டி.எஸ். செல்வநாயகம், ஆனால் இந்த வழக்குகள் எதுவும் மாநில பதிவேட்டில் மற்றும் ஊடகங்களுக்கு அளிக்கப்படும் ‘கொரோனா நிலவரம்’ அறிக்கைகளில் சேர்க்கப்படவில்லை என்று தெளிவுபடுத்தினர். 

அதோடு, போர்ட்டலில் பதிவேற்றம் செய்யப்பட்ட வழக்குகள் தொடர்பாக முழுமையான விபரங்களும் அதில் இடம் பெறவில்லை. இது பாசிடிவ் நோயாளிகளை அடையாளம் காணுவதை மேலும் தாமதமாக்கியது.

Also Read | Benefits of Ragi: பாலை விட 3 மடங்கு கால்சியம் எதில் இருக்கிறது தெரியுமா?

ஆய்வகத்தின் இந்த செயலுக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கும் இடையே ஏதேனும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுகிறது. ஒருவருக்கு கொரோனா இருப்பது தெரிந்தால் வேறு வழியின்றி நோயாளிகள் மருத்துவமனைகளுக்கு வருவார்கள். அதன் மூலம் அதிக கட்டணத்தை மருத்துவமனைகள் பெற திட்டமிட்டிருக்கலாம் என்ற ஐயமும் எழுகிறது.

தற்போது, அந்த குறிப்பிட்ட ஆய்வகம், பரிசோதனைகள் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதோடு, ஆய்வகத்தின் நிர்வாக இயக்குநர் மூன்று நாட்களுக்குள் தங்கள் தரப்பு விளக்கத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக Medell Laboratory வெளியிட்டுள்ள அறிக்கையில், “SARS Cov-2 க்கான RT-PCR மாதிரிகளை பரிசோதிப்பதற்கான ஆய்வகத்திற்கான அனுமதி தொடர்பாக பொது சுகாதாரக் குழுவின் ஆய்வுக்குப் பிறகு முடிவு செய்யப்படும். ஐ.சி.எம்.ஆர்.  தரவுதளத்தில் தவறான தரவுகள் பதிவேற்றம் செய்ததற்கு வருந்துகிறோம். தரவுகளை முழுமையாகவும் சரியாகவும் திருத்துவதற்கான நடவடிக்கைகளை ஏற்கனவே தொடங்கிவிட்டோம். கொரோனா பரிசோதனையை செய்துக் கொண்டவர்களின் தரவுகள் மற்றும் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட அறிக்கைகளை சரிபார்த்து, தவறை திருத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read | ஓரின சேர்க்கை திருமணத்தை அயர்லாந்து சட்டப்பூர்வமாக்கிய நாள் May 22

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News