சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் வெப்பசலனம் மற்றும் வடமேற்கு தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் பெரும்பாலான மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேவேளையில் கோயமுத்தூர், நீலகிரி, திண்டுக்கல், தேனி, தருமபுரி, சேலம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரி இடங்களில் கனமைழ பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதுக்குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை மண்டல வானிலை ஆய்வு இயக்குனர் கூறியது, அக்டோபர் 21 மற்றும் 22 தேதிகளில் தமிழகத்தில் மிதமான மழை முதல் கனமழைக்கு பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், அதனால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் கூறியுள்ளார். மேலும் நேற்று சென்னை அய்னா புறத்தில் அதிகபட்சமாக 13 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
லட்சத்தீவு மற்றும் அரபிக்கடல் ஒட்டியுள்ள பகுதிக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் கூறியுள்ளார்.
சென்னையை பொறுத்த வரை அடுத்த 24 மணிநேரம் வானத்தின் நிலை பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும். மிதமான மழைக்கு அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்சமாக 28 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கும் எனவும் சென்னை மண்டல வானிலை ஆய்வு அறிவித்துள்ளது.